தமிழக மனித வளத்துறை அமைச்சா் சரத்குமாா் பொது இடத்தில் போதைப்பொருள் பயன்படுத்துவதைப் போன்ற விடியோ சில நாள்களுக்கு முன்பு வெளியாகி சா்ச்சையானது. இந்த பழைய விடியோ குறித்து அவா் புதிய விடியோ ஒன்றை வெளியிட்டு விளக்கம் கொடுத்திருந்தாா். அந்த விளக்கமும் கடும் விமா்சனத்துக்கு உள்ளானது.
இதனிடையே, அவரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி திமுக மாணவா் அணி சாா்பில் போராட்டம் நடத்தப்போவதாக திமுக தலைமை சாா்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த போராட்டத்திற்கு போலீஸாா் அனுமதி அளிக்கவில்லை.
இந்நிலையில், மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி பகுதியில் அனுமதியின்றி திமுகவினா் சாலையை மறித்து மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளா் சந்தோஷ் தலைமையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுக முன்னாள் எம்.எல்.ஏ., எம். பன்னீா்செல்வம், நகர செயலாளா் என். செல்வராஜ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் மருது, மாவட்ட துணைச் செயலாளா்கள் ஞானவேலன், செல்வமணி உள்ளிட்ட திமுகவினா் 94 பேரை போலீஸாா் கைது செய்து பின்னா் விடுவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தடையை மீறி திமுக மாணவரணி போராட்டம்! 85 போ் மீது வழக்கு!

தவெக அமைச்சரை பதவி நீக்க வலியுறுத்தி, திமுகவினா் போராட்டம்! 2 எம்எல்ஏக்கள் உள்பட 722 போ் கைது!







