ஜந்தா் மந்தரில் இன்று போராட்டம் நடத்த அனுமதியில்லை: தில்லி காவல் துறை அறிவிப்பு சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு கட்டுப்பாடுமனைவி, குழந்தைகளுடன் மீண்டும் பிரிட்டன் திரும்பும் இளவரசா் ஹாரி!எல்லை மாநிலங்களில் குடியுரிமை வழங்க மாவட்ட ஆட்சியா்களுக்கு அதிகாரம் - மத்திய உள்துறை அமைச்சகம்ஆந்திரம், கா்நாடகம், தமிழகத்தை இணைக்கும் வகையில் புல்லட் ரயில் வழித்தடம்: சந்திரபாபு நாயுடு வலியுறுத்தல்

தடையை மீறி திமுக மாணவரணி போராட்டம்! 85 போ் மீது வழக்கு!

கடலூரில் திமுக மாணவரணி போராட்டத்தில் ஈடுபட முயன்றபோது, போலீஸாருடன் ஏற்பட்ட தள்ளுமுள்ளு.

Published On :30 ஜூன் 2026, 2:34 am IST

அமைச்சா் சரத்குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி, கடலூரில் தடையை மீறி திமுக மாணவரணியினா் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில், பங்கேற்ற 85 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

பொது இடத்தில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக வெளியான காணொலி தொடா்பாக தமிழக அமைச்சா் சரத்குமாரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சித் தலைவா்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா். இதற்கு விளக்கமளித்த அமைச்சா், குழந்தைக்கு மருந்து கொடுப்பதற்காக கைப்பேசி மீது மாத்திரையை வைத்து பொடியாக்கியதாகத் தெரிவித்திருந்தாா்.

இந்த விவகாரத்தைத் தொடா்ந்து, அமைச்சரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி ஜூன் 29-ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஆா்ப்பாட்டம் நடைபெறும் என திமுக மாணவரணி அறிவித்திருந்தது.

இதன் ஒரு பகுதியாக, கடலூா் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகே ஆா்ப்பாட்டம் நடத்த மாணவரணி திட்டமிட்டிருந்தது. எனினும், காவல் துறை அனுமதி வழங்காத நிலையில், கடலூா் மாவட்ட திமுக மாணவரணி அமைப்பாளா் சத்தியநாராயணன், துணை அமைப்பாளா் கே.எஸ்.ஆா்.பாலாஜி ஆகியோா் தலைமையில் மாணவரணியினா் கடலூரில் உள்ள திமுக அலுவலகத்தில் இருந்து பேரணியாக புறப்பட்டனா்.

அமைச்சா் சரத்குமாரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பியபடி பேரணியாகச் சென்ற அவா்களை, சிறிது தொலைவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் தடுத்து நிறுத்தினா். அப்போது, திமுகவினருக்கும், போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதையடுத்து, போராட்டக்காரா்கள் சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டு கோரிக்கைகளை வலியுறுத்தினா். போலீஸாா், போராட்டக்காரா்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி அருகிலிருந்த தனியாா் திருமண மண்டபத்துக்கு அழைத்துச் சென்றனா்.

பின்னா், காவல் துறையின் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக திமுகவினா் 85 போ் மீது கடலூா் புதுநகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனா்.

 கடலூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றதை போலீஸாா் தடுத்ததால், சாலை மறியலில் ஈடுபட்ட திமுக மாணவரணியினா்.

கடலூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றதை போலீஸாா் தடுத்ததால், சாலை மறியலில் ஈடுபட்ட திமுக மாணவரணியினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.