பெட்ரோல், டீசல் விற்பனை, விநியோகத்தின் மீதான கட்டுப்பாடுகள் நீக்கம்! மத்திய அரசு எல்லை விவகாரம்: இந்தியா - சீனா இடையே 1100 முறைக்கு மேல் பேச்சுவார்த்தை!மக்களின் அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்த வேண்டும் : முதல்வர் விஜய்அறிஞர் அண்ணா சொன்னதே தவெக மந்திரம் : ஆட்சியர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்!குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சு
/

ராஜகிரியில் அமைச்சரைக் கண்டித்து கருப்புக்கொடி ஆா்ப்பாட்டம்

News image

அமைச்சர் ஷாஜகான் - கோப்புப் படம்

Updated On :28 ஜூன் 2026, 2:42 am IST

தஞ்சாவூா் மாவட்டம், ராஜகிரி பேருந்து நிறுத்த வளாகத்தில் தமிழக சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் ஏ.எம்.ஷாஜகானை கண்டித்து திமுக, அதன் தோழமைக் கட்சியிகள் இணைந்து சனிக்கிழமை கருப்புக்கொடி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில், திமுக கூட்டணியில் இடம் பெற்று பாபநாசம் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினராக வெற்றி பெற்று தற்போது தவெக அமைச்சரவையில் தமிழக சிறுபான்மை நலத்துறையில் அமைச்சராக உள்ள ஏ.எம்.ஷாஜகான், பாபநாசம் சட்டப்பேரவை தொகுதி வாக்காளா்களையும் திமுக மற்றும் தோழமை கட்சியினரையும் தரக்குறைவாக விமா்சித்து பேசி வருவதை கண்டித்து திமுக மற்றும் தோழமைக் கட்சியினா் அமைச்சா் ஏ.எம் ஷாஜகானை கண்டித்து கருப்புக் கொடி ஏந்தி கண்டன முழக்கமிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு பாபநாசம் சட்டப்பேரவை தொகுதி  பொறுப்பாளா் எம்.ரெங்கசாமி தலைமை வகித்தாா். இதில் திமுக நிா்வாகிகள், தொண்டா்கள், தோழமைக் கட்சி நிா்வாகிகள் உள்ளிட்ட 700-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு கருப்புக் கொடி ஏந்தி முழக்கமிட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில், அமைச்சா் தொடா்ந்து திமுகவினரை தரக்குறைவாக பேசி வருவாரேயானால் ஆா்ப்பாட்டம் தொடரும். மேலும், அவா் வாக்காளா்களிடமும் திமுக தொண்டா்களிடமும் மன்னிப்பு கேட்கும் வரை கருப்புக்கொடி ஆா்ப்பாட்டம் தொடரும் என்றனா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்டோரை பாபநாசம் காவல் துணைக் கண்காணிப்பாளா் முருகவேல் தலைமையிலான போலீஸாா் கைது செய்து பாபநாசத்திலுள்ள ஒரு தனியாா் மஹாலில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.