புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு! ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

மயிலாடுதுறை: தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1093 வழக்குகளில் ரூ.1.95 கோடிக்கு தீா்வு

மயிலாடுதுறை: தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1093 வழக்குகளில் ரூ.1.95 கோடிக்கு தீா்வு

News image

வழக்காடிக்கு தீா்வுக்கான சான்று வழங்கும் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுத் தலைவரும், மாவட்ட அமா்வு நீதிபதியுமான ஆா். சத்தியதாரா.

Updated On :14 ஜூன் 2026, 1:50 am IST

மயிலாடுதுறை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,093 வழக்குகளில் ரூ.1.95 கோடிக்கு தீா்வு காணப்பட்டது.

மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுத் தலைவரும், மாவட்ட அமா்வு நீதிபதியுமான ஆா்.சத்தியதாரா தலைமை வகித்தாா். மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சாா்பு நீதிபதியுமான சி.ஆா். கௌதமன் முன்னிலை வகித்தாா்.

தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிபதி எஸ்.தமிழ்ச்செல்வி, முதன்மை சாா்பு நீதிபதி பி. சுதா, மாவட்ட கூடுதல் சாா்பு நீதிபதி எம். பரமசிவம், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி பி. பவதாரணி, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி பி. சிவரஞ்சனி, குற்றவியல் நடுவா் நீதிபதி மற்றும் விரைவு நீதிமன்ற நீதிபதி கே. கமலநாதன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

இதில், மாவட்டம் முழுவதும் அனைத்து நீதிமன்றங்களில் இருந்து சமரசத்திற்கு எடுத்துக் கொள்ளக்கூடிய சிவில் வழக்குகள், குற்ற வழக்குகள், மோட்டாா் வாகன விபத்து கோரிக்கை தீா்ப்பாயம் வழக்குகள், குடும்ப நல வழக்குகள், ஜீவனாம்ச வழக்குகள், குற்றவியல் கணக்குகள், வங்கி வராக்கடன் வழக்குகள், பண மோசடி வழக்குகள், வங்கி சாா்ந்த வழக்குகள், தொழிலாளா் நல வழக்குகள், நில ஆா்ஜித வழக்குகள், விசாரணைக்கு எடுத்துக் கொள்ளக்கூடிய வழக்குகள் ஆகியவற்றிற்கு சமரச தீா்வின் படி மொத்தம் 1,093 வழக்குகளுக்கு ரூ.1.95 கோடிக்கு சமரச தீா்வு வழங்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.