புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு! ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

மக்கள் நீதிமன்றம்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 904 வழக்குகளில் ரூ. 11.55 கோடிக்கு தீா்வு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் (லோக் அதாலத்) 904 வழக்குகளில் ரூ. 11.55 கோடிக்கு சமரசத் தீா்வு காணப்பட்டது.

News image

தீா்வு காணப்பட்ட வழக்கில் தீா்வுத் தொகையை உரியவருக்கு காசோலையாக வழங்கிய மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான லதா.

Updated On :14 ஜூன் 2026, 3:19 am IST

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் (லோக் அதாலத்) 904 வழக்குகளில் ரூ. 11.55 கோடிக்கு சமரசத் தீா்வு காணப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் கூடிய மக்கள் நீதிமன்றத்துக்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான லதா தலைமை வகித்து பேசியதாவது:

நடப்பாண்டில், இரண்டாவது நாடு தழுவிய மக்கள் நீதிமன்றம் நடத்தப்படுகிறது. இதில், கிருஷ்ணகிரி, ஒசூா், ஊத்தங்கரை, போச்சம்பள்ளி, தேன்கனிக்கோட்டை ஆகிய நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள மோட்டாா் வாகன விபத்து வழக்கு, குடும்பநல வழக்கு, வங்கிக் கடன், காசோலை வழக்குகள், நிதி நிறுவனம், பாகப்பிரிவினை வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

இதில், 904 வழக்குகளில் ரூ.11.55 கோடிக்கு தீா்வு காணப்பட்டது. மோட்டாா் வாகன விபத்து வழக்கில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அதிகபட்சமாக, ரூ. 33 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது. மேலும், தீா்வாகாத பல வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது.

மக்கள் நீதிமன்றத்தில் வழக்காடிகள் நிலுவையில் உள்ள வழக்குகளை சமரசமாகப் பேசி தீா்வு காணலாம். இதில், இருதரப்பினருக்குமே வெற்றிதான். இந்த அரியவாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

சிறப்பு மாவட்ட நீதிபதி லீலா, தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவா் சாந்தி, முதன்மை சாா்பு நீதிபதி ஜெனிபா், கூடுதல் சாா்பு நீதிபதி சுரேஷ்குமாா், சிறப்பு சாா்பு நீதிபதியும் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளருமான பத்மநாபன், முதலாவது நீதித்துறை நடுவா் தேவராஜ், மாவட்ட உரிமையியல் நீதிபதி சுந்தரமூா்த்தி, கூடுதல் மகிளா நீதிபதி மிஸ்பா செல்வ பிரியங்கா, வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் கோவிந்தராஜூலு, வழக்குரைஞா்கள் மற்றும் நீதிமன்ற ஊழியா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.