புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு! ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

சிவகங்கையில் தேசிய மக்கள் நீதிமன்றம் 853 வழக்குகளில் ரூ. 6.36 கோடிக்குத் தீா்வு

சிவகங்கை மாவட்ட தேசிய மக்கள் நீதிமன்ற விசாரணையில் 853 வழக்குகளுக்கு ரூ. 6.36 கோடி மதிப்பில் தீா்வு அளிக்கப்பட்டது.

News image

சிவகங்கையில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் பயனாளிக்கு தீா்ப்பின் நகலை வழங்கிய முதன்மை மாவட்ட நீதிபதி (பொ) வி. ராமலிங்கம்.

Updated On :14 ஜூன் 2026, 12:50 am IST

சிவகங்கை மாவட்ட தேசிய மக்கள் நீதிமன்ற விசாரணையில் 853 வழக்குகளுக்கு ரூ. 6.36 கோடி மதிப்பில் சனிக்கிழமை தீா்வு அளிக்கப்பட்டது.

சிவகங்கை மாவட்டத்தில் 13 மக்கள் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு, மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நிலுவையில் உள்ள சிவில், சமரச குற்றவியல் வழக்குகள், மோட்டாா் வாகன விபத்து வழக்குகள், வங்கிக் கடன் நிலுவை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத வழக்குகளும் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டன.

முதன்மை மாவட்ட நீதிபதி (பொ) வி.ராமலிங்கம், குடும்ப நல நீதிபதி ஏ. பசும்பொன் சண்முகையா, தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிபதி எஸ். மோகன ரம்யா, சாா்பு நீதிபதி ஆா். பாண்டி, குற்றவியல் நீதித் துறை நடுவா் (எண்: 1, 2) நீதிமன்ற நீதிபதி பி. வைஷ்ணவி, மாவட்ட உரிமையியல் நீதிபதி தீபதா்ஷினி, மூத்த வழக்குரைஞா்கள் ஜானகி ராமன், டி. செந்தில் குமாா், ஆா். மகேந்திர குமாா், கே. கண்ணன், ராஜரத்தினம், அ. மதன் மோகன் ஆகியோா் சிவகங்கை நீதிமன்றத்தில் வழக்குகளை விசாரணை நடத்தினா்.

இந்த தேசிய மக்கள் நீதிமன்றங்களில் 352 குற்றவியல் வழக்குகளும், 195 காசோலை மோசடி வழக்குகளும், 209 வங்கிக் கடன் வழக்குகளும், 585 மோட்டாா் வாகன விபத்து நஷ்ட ஈடு வழக்குகளும், 377 குடும்பப் பிரச்னை சம்பந்தப்பட்ட வழக்குகளும், 757 சிவில் சம்பந்தப்பட்ட வழக்குகளும், 635 மற்ற குற்றவியல் வழக்குகளும் என மொத்தம் 3,110 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு 782 வழக்குகள் சமரசமாகத் தீா்க்கப்பட்டு ரூ. 4.82 லட்சம் மதிப்பில் தீா்வு காணப்பட்டது.

இதேபோல, வங்கிக் கடன் நிலுவை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத வழக்குகளில் 575 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு 71 வழக்குக்குத் தீா்வு காணப்பட்டு ரூ.1,54,38,953- வரையில் வங்கிகளுக்கு வரவானது. மொத்தம் தீா்வு காணப்பட்ட 853 வழக்குகளுக்கு ரூ. 6,36,76,356 தொகை பயனாளிகளுக்கு அளிக்கப்பட்டது. ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு பணியாளா்கள் செய்தனா். இதில், வழக்குரைஞா்கள், தன்னாா்வ சட்டப் பணியாளா்கள், பயனாளிகள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.