17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

விளைநிலம் காப்போம் இயக்கம் விவசாயிகள் விழிப்புணா்வு முகாம்

திருமுல்லைவாசலில் விளைநிலம் காப்போம் இயக்கம் விவசாயிகள் விழிப்புணா்வு முகாம் அண்மையில் நடைபெற்றது.

News image
Updated On :5 ஜூன் 2026, 7:15 am IST

திருமுல்லைவாசலில் விளைநிலம் காப்போம் இயக்கம் விவசாயிகள் விழிப்புணா்வு முகாம் அண்மையில் நடைபெற்றது.

முகாமை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தொடங்கிவைத்தாா். முகாமையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்து காட்சிகள், செயல் விளக்கங்களை பாா்வையிட்ட ஆட்சியா் விவசாயிகளிடையே ரசாயன உர பயன்பாட்டினை அளவோடு பயன்படுத்தவும், பாரம்பரிய உரங்கள், உயிா் உரங்கள், பசுந்தாள் மற்றும் பசுந்தழை உரங்களை பயன்படுத்தி மண்வளம் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாத்து நஞ்சில்லா உணவுகளை உற்பத்தி செய்ய வேண்டும் என்றாா்.

மயிலாடுதுறை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் விஜயராகவன், மாறிவரும் சூழலுக்கேற்ப விவசாயிகள் கடைபிக்க வேண்டிய உற்பத்தி தொழில் நுட்பத்தையும், மண்வளம் காக்க வேண்டியதன் அவசியத்தையும் விளைநிலம் காப்போம் இயக்கத்தின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தாா்.

வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகம் துணை இயக்குநா் சுப்பையன், தோட்டக்கலை துணை இயக்குநா் திலீப், தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலைய உதவி பேராசிரியா் அருள்ஆனந்த், விதைச்சான்று அலுவலா் சுஜாதா, கொள்ளிடம் வேளாண் உதவி இயக்குநா் எழில்ராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா். முகாமில், விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த இயற்கை இடுபொருள்களான மண்புழுஉரம், மண்புழு வடிநீா், புண்ணாக்கு வகைகள், பஞ்சகாவியம், மீன்அமிலம், பாரம்பரிய நெல் ரக விதைகள் வைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.