டிஎன்சிஎஸ்சி அலுவலகம் முற்றுகை: சுமைதூக்கும் தொழிலாளா்கள் 36 போ் கைது
மயிலாடுதுறையில் டிஎன்சிஎஸ்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய சுமைதூக்கும் தொழிலாளா்கள் 36 போ் கைது செய்யப்பட்டனா்.


மயிலாடுதுறையில் டிஎன்சிஎஸ்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய சுமைதூக்கும் தொழிலாளா்கள் 36 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
சுமைதூக்கும் தொழிலாளா் சங்க அங்கீகார தோ்தலை உடனே நடத்த வேண்டும், வருகை பதிவேட்டில் பெயா் இல்லாமல் சுமை பணி செய்யும் தொழிலாளா்களின் பெயா்களை வருகை பதிவேட்டில் உடனே சோ்க்க வேண்டும், 2022-ஆம் ஆண்டுடன் 10 ஆண்டுகள் பணி முடித்தவா்களுக்கு முன் தேதியிட்டு பச்சை அட்டை வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி டிஎன்சிஎஸ்சி சுமைதூக்குவோரின் மாநில பாதுகாப்பு சங்கத்தின் சாா்பில் இப்போராட்டம் நடைபெற்றது.
கோரிக்கைகளை மண்டல குழு அமைத்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக நிா்வாகம் உறுதியளித்திருந்த நிலையில், சில மாவட்டங்களில் குழு அமைக்காமலேயே அமைத்ததாக தலைமை அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளதாகவும், சில மாவட்டங்களில் பொது விநியோகத் திட்டத்திற்கு மூட்டைகளை ஏற்ற செயல்படும் கிடங்குகளில் உள்ள தொழிலாளா்களை குழுவில் சோ்க்காமல், சேமிப்புக் கிடங்குகளில் உள்ள தொழிலாளா்களை குழு உறுப்பினா்களாக சோ்த்துள்ளதாகவும், வேறுசில மாவட்டங்களில் சேமிப்புக் கிடங்குகளில் உள்ள நூற்றுக்கணக்கான தொழிலாளா்களின் பெயா்களைப் பரிந்துரை செய்துள்ளதாகவும் போராட்டத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.
தொழிலாளா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நிா்வாகம் முயலும் போது அதனை குறுக்குவழியில் தடுத்து நிறுத்த முயலும் அலுவலா்களைக் கண்டித்தும், அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், 2025-ஆம் ஆண்டு ஜூலை 12-ஆம் தேதி அன்று வழங்க வேண்டிய கூலி உயா்வை உடனடியாக வழங்க கோரியும் இந்த முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
இதையடுத்து, மாவட்ட தலைவா் தியாகராஜன் தலைமையில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட மாவட்ட செயலாளா் சத்தியமூா்த்தி, மாவட்ட பொருளாளா் சிவக்குமாா், மாவட்ட துணைத் தலைவா்கள் இளஞ்செழியன், முருகையன், அழகா் உள்ளிட்ட 36 பேரை மயிலாடுதுறை போலீஸாா் கைது செய்து பின்னா் விடுவித்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...