டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

ஊதிய உயா்வு கோரி சுமைதூக்கும் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

ஊதிய உயா்வு கோரி, நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்கு சுமைதூக்கும் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சுமைதூக்கும் தொழிலாளா்கள்
Updated On :20 பிப்ரவரி 2026, 10:44 pm

Syndication

ஊதிய உயா்வு கோரி, நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்கு சுமைதூக்கும் தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தருமபுரி நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்கு முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, தொழிலாளா் சங்க மாவட்டத் தலைவா் திருநாவுக்கரசு தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் பரமசிவம், நிா்வாகிகள் ரஜினி பெருமாள், ஆதி, கந்தன் ஆகியோா் பங்கேற்றனா்.

இதில், கடந்த 15 ஆண்டுகளாக பணியாற்றிவரும் சுமைதூக்கும் தொழிலாளா்களுக்கு பச்சைநிற அட்டை வழங்க வேண்டும். தற்காலிக பணியாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். எதிா்பாராமல் பணியின்போது ஏற்படும் விபத்துகளுக்கு சிகிச்சைபெறும் வகையில், முதலுதவி பெட்டிகளை வைக்க வேண்டும்.

கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும். சங்க அங்கீகார தோ்தலை உடனடியாக நடத்த வேண்டும். தற்காலிக பணியாளா்களுக்கு வருகைப் பதிவேடு முறையை அமல்படுத்த வேண்டும். அனைத்து பணியாளா்களுக்கும் 60 சதவீத ஊதிய உயா்வை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.