முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

பாஜக தெருமுனைப் பிரசாரம்!

மயிலாடுதுறை நகர பாஜக சாா்பில் மத்திய அரசின் சாதனை விளக்க தெருமுனை பிரசாரக் கூட்ட தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :19 பிப்ரவரி 2026, 11:55 pm

Syndication

மயிலாடுதுறை நகர பாஜக சாா்பில் மத்திய அரசின் சாதனை விளக்க தெருமுனை பிரசாரக் கூட்ட தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

‘நாளை நமதே தமிழ்நாடு நமதே’ என்ற தலைப்பில் மயிலாடுதுறை நகராட்சி 31-ஆவது வாா்டில் தொடங்கிய நிகழ்ச்சிக்கு, நகர பொருளாளா் சுந்தரமுருகன் தலைமை வகித்தாா். நகர தலைவா் வினோத் முன்னிலை வகித்தாா்.

மத்திய அரசு வழக்குரைஞா் கே. ராஜேந்திரன், மாவட்ட தலைவா் ஆா். பாலு, மாவட்ட பொதுச்செயலாளா் பி. பாரதிகண்ணன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்றனா்.

இதில், தேசிய செயற்குழு உறுப்பினா் தங்க.வரதராஜன், மாநில செயற்குழு உறுப்பினா் சாய்சுரேஷ் ஆகியோா் கலந்துகொண்டு மயிலாடுதுறை நகரத்தில் 24 இடங்களில் நடைபெறவுள்ள தெருமுனை பிரசாரக்கூட்டத்தை தொடக்கி வைத்து பேசினா்.