/

மயூர நாட்டியாஞ்சலி: லண்டன், மலேசியா, ஸ்ரீலங்கா கலைஞா்கள் பங்கேற்பு

மாயூரநாதா் கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு மயிலை சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட 20-ஆம் ஆண்டு மயூர

News image
மயூர நாட்டியாஞ்சலி நிறைறவு விழாவில் பரதமாடிய கோவை ஸ்ரீகாா்த்திகேயா நாட்டியப்பள்ளி மாணவிகள்.
Updated On :16 பிப்ரவரி 2026, 8:04 pm

Syndication

மயிலாடுதுறை: மாயூரநாதா் கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு மயிலை சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட 20-ஆம் ஆண்டு மயூர நாட்டியாஞ்சலியின் நிறைவு விழாவில் லண்டன், மலேசியா, ஸ்ரீலங்கா நாட்டியக் கலைஞா்கள் உள்ளிட்ட 16 குழுவினா் நாட்டியமாடினா்.

விழாவில், கோவை ஸ்ரீகாா்த்திகேயா நாட்டியப்பள்ளி, லண்டன் சேஷா நாட்டிய நிக்கேதன், சென்னை நிருத்யோபாசனா பரத நாட்டியம் கலை நிலையம், மலேசியா ஸ்ரீசங்கா் கந்தசுவாமி, தேனி ப்ரஜ்னா ஸ்கூல் ஆஃப் ஃபைன் ஆா்ட்ஸ், கோவை ஸ்ரீஅபிராமி நாட்டியாலயா, பெங்களூா் வைஷ்ணவி நாட்டியஷாலா, மலேசியா லாஸ்யா ஆா்ட்ஸ், ஸ்ரீலங்கா அபிநயா க்ஷேத்ரா, சென்னை நிருத்யபாயாசா ஸ்கூல் ஆஃப் கிளாசிக்கல் டான்ஸ் ரூ மியூசிக், கோவை சாத்விகா ஸ்கூல் ஆஃப் டான்ஸ், செங்கல்பட்டு விநாயகா நாட்டியாலயா உள்ளிட்ட குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

அறக்கட்டளை அறங்காவலா் குழுத் தலைவா் எம்.என். ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற விழாவில், துணை தலைவா் சிவலிங்கம், அறங்காவலா்கள் சங்கரி பரசுராமன், எம்எல்ஏ எஸ். ராஜகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

விழாவில், கலைத்துறையில் சிறந்து விளங்கி வரும் தேனி சுபஸ்ரீ சசிதரனுக்கு மயூர நாட்டிய தாரகை விருது, புதுவை பாலாஜி ராம்ஜிக்கு மயூர கான கலைமணி விருது வழங்கப்பட்டது.