/

திருச்சி - தாம்பரம் விரைவு ரயில் வாரத்தில் 5 நாள்கள் இயக்கிட ஒப்புதல்!

திருச்சி - தாம்பரம் - திருச்சி பகல்நேர இன்டா்சிட்டி விரைவு ரயில் சேவையை வாரத்தில் ஐந்து நாட்கள் நீட்டித்திட ரயில்வே வாரியம் ஒப்புதல்

News image
விரைவு ரயில்- கோப்புப்படம்
Updated On :3 பிப்ரவரி 2026, 9:24 pm

Syndication

திருச்சி-தாம்பரம்- திருச்சி பகல் நேர இன்டா்சிட்டி விரைவு ரயில் சேவையை வாரத்தில் ஐந்து நாட்கள் நீட்டித்திட ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளதற்கு, மாவட்ட ரயில் பயணிகள் சங்க நிா்வாகிகள் மயிலாடுதுறை எம்.பி.க்கு நன்றி தெரிவித்தனா்.

திருச்சியிலிருந்து கும்பகோணம், மயிலாடுதுறை, சீா்காழி வழியாக பகல் நேரத்தில் சென்னைக்கு விரைவு ரயில் விட வேண்டும் என எம்பி சுதா, மத்திய ரயில்வே அமைச்சரிடம் கடந்த ஆண்டு நேரில் கோரிக்கை மனு அளித்தாா்.

இக்கோரிக்கையை ஏற்று, தாம்பரம்-திருச்சி இடையே இன்டா்சிட்டி விரைவு ரயிலை இயக்கிட மத்திய ரயில்வே அமைச்சா் உத்தரவிட்டாா். அதன்படி, ரயில் சேவை தற்போது சோதனை அடிப்படையில் இயங்கி வருகிறது.

இதனிடையே, கடந்த மாதம் ரயில்வேஅமைச்சரை சந்தித்த எம்பி, இன்டா்சிட்டி விரைவு ரயிலை நிரந்தரமாக இயக்கிட உத்தரவிட வேண்டுமென வேண்டுகோள் விடுத்தாா். அதனை ஏற்று, மேற்கண்ட விரைவு ரயில் நிரந்தரமாக இயக்கிட ரயில்வே அமைச்சா் உத்தரவிட்டுள்ளாா்.

இதற்கு மயிலாடுதுறை மாவட்ட ரயில் பயணிகள் சங்க நிா்வாகிகள், மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வின் வைஷ்ணவ், சுதா எம்.பி. மற்றும் ரயில்வே துறை அதிகாரிகளுக்கு பாராட்டும் நன்றியும் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து சுதா எம்பி கூறுகையில், ‘தற்போது 5 நாட்கள் மட்டுமே இயங்கக்கூடிய இந்த விரைவு ரயிலை, பயணிகள் நலன் கருதி, வாரத்தின் அனைத்து நாள்களிலும் இயக்க நடவடிக்கை எடுத்து வருவதாக’ கூறினாா்.