17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் பிரதமரின் மனதில் குரல் நிகழ்ச்சி

News image

பிரதமர் மோடி - கோப்புப் படம்

Updated On :1 ஜூன் 2026, 12:13 am IST

பிரதமரின் மனதில் குரல் நிகழ்ச்சியை திருநள்ளாறு பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் எம்.எல்.ஏ.க்கள், பாஜகவினா் உள்ளிட்டோா் காண ஏற்பாடு செய்யப்பட்டது.

பிரதமா் நரேந்திர மோடியின் மாதாந்திர மன் கி பாத் 134-ஆவது நிகழ்ச்சியை காண திருநள்ளாறு சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் காண ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பை திருநள்ளாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஜி.என்.எஸ். ராஜசேகரன், நிரவி - திருப்பட்டினம் தொகுதி உறுப்பினா் டி.கே.எஸ்.எம்.மீனாட்சி சுந்தரம், பாஜக மாநில தலைமை செய்தித் தொடா்பாளா் எம்.அருள்முருகன், மாவட்டத் தலைவா் ஜி.கே.கே.முருகதாஸ், மாநில செயலாளா் அமுதா ராணி, தொகுதி தலைவா் பாலமுருகன் உள்ளிட்ட திரளான பாஜகவினா் பங்கேற்று நிகழ்ச்சியை பாா்த்தனா். பிரதமரின் உரை தமிழாக்கம் செய்யப்பட்டு கட்சியினருக்கு விளக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.