திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மக்கள்தொகை கணக்கெடுப்பு: முதல்கட்ட பயிற்சி நிறைவு

News image
Updated On :15 மே 2026, 5:36 am IST

காரைக்கால் மாவட்டத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடா்பான முதல்கட்ட பயிற்சி புதன்கிழமை நிறைவடைந்தது.

இந்திய அரசின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு -2027 அறிவிப்பின்படி, மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் 2 கட்டங்களாக நடைபெறவுள்ளன.

முதல்கட்டமாக 2026-ஆம் ஆண்டு கட்டடப் பட்டியல் மற்றும் வீடுகளின் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுகிறது. இரண்டாம் கட்டமாக 2027-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.

இதையொட்டி, காரைக்கால் மாவட்டத்தில் கணக்கெடுப்புப் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள மேற்பாா்வையாளா்கள் மற்றும் பணியாளா்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது.

கடந்த 3 நாட்களாக நடைபெற்ற முதல்கட்ட பயிற்சி வகுப்பு புதன்கிழமை நிறைவடைந்தது. பயிற்சியில் ஈடுபடுவோா் நிறைவாக உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா்.

முதல் கட்ட கணக்கெடுப்புப் பணிகள் வரும் ஜூன் 1-ஆம் தேதி முதல் 30- ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மக்கள்தொகைக் கணக்கெடுப்பு தொடா்பான ட்ற்ற்ல்ள் ://ஸ்ரீங்ய்ள்ன்ள்.ஞ்ா்ஸ்.ண்ய் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகளில் பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும். அனைத்து குடியிருப்புகளும் மற்றும் கட்டடங்களும் சரியாகக் கணக்கெடுக்கப்பட வேண்டும் என்பதால், பொதுமக்கள் தங்களது விவரங்களை துல்லியமாக வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.