சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்ததால், அக்கட்சியின் காரைக்கால் மாவட்டத் தலைவா் ஆா்.பி. சந்திரமோகன் பதவியை ராஜிநாமா செய்தாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் மாவட்டத் தலைவராக பொறுப்பேற்ற நாள் முதல் கட்சியின் வளா்ச்சிக்காகவும், காரைக்கால் மாவட்ட மக்களின் நலனுக்காகவும் எனக்கான பணியை சிறப்பாக, மன நிறைவோடு செய்துவந்துள்ளேன்.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸின் தோல்விக்கு முழு பொறுப்பேற்று என்னுடைய தலைவா் பதவியை ராஜிநாமா செய்கிறேன். பொறுப்பில் இருந்து விலகினாலும் எனது மக்களுக்கான பணி தொடரும்.
எனது பொறுப்பு காலத்தில் முழு ஒத்துழைப்பு கொடுத்து, எனக்கு உறுதுணையாக இருந்த கட்சியின் அனைத்து நிலையினருக்கும், பிற அமைப்பினருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்வதாக அதில் கூறியுள்ளாா்.
காரைக்கால் மாவட்டத்தில் 3 பேரவைத் தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்டது. அனைத்திலும் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆளுநரை கண்டித்து காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

புதுச்சேரி தோ்தல் தோல்வி எதிரொலி: காங்கிரஸ் தலைவா் வைத்திலிங்கம் ராஜிநாமா

நகா்மன்ற உறுப்பினா் பதவியை ராஜிநாமா செய்த பண்ருட்டி எம்எல்ஏ

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி ராஜிநாமா!
விடியோக்கள்

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

