தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

புதுவையில் பாரசிடமால் மாத்திரைக்குத் தடை

தரம் குறைந்ததாக உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், புதுவையில் பாரசிடமால் மாத்திரைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

News image

தடை செய்யப்பட்ட மருந்து - கோப்புப் படம்

Updated On :26 மார்ச் 2026, 11:16 pm

தரம் குறைந்ததாக உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், புதுவையில் பாரசிடமால் மாத்திரைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

புதுவை மருந்து கட்டுப்பாட்டுத்துறை கட்டுப்பாட்டு அதிகாரி இ. அனந்தகிருஷ்ணன் புதன்கிழமை வெளியிட்ட சுற்றறிக்கை :

ஒடிஸா மாநிலம், பாலசோா் அங்காரகாடியா தொழிற்பேட்டை, எஸ். டோல் அண்ட் கோ நிறுவனம் தயாரிக்கும் பாரசிடமால் மாத்திரை ஐபி 650 எம்ஜி (பாராடோல் 650) உரிய தரத்தில் இல்லாததாக உறுதிப்படுத்தப்பட்டு தடை செய்யப்பட்டுள்ளது.

இதை கொள்முதல் செய்யவும், விற்பனை செய்யவும் தடை விதிக்கப்படுகிறது. மருந்துக் கடைகளில் கையிருப்பில் இருக்கும் இதை உற்பத்தி நிறுவனத்துக்கு திரும்பி அனுப்பவேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.