தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

புதுவையில் 3 மருந்துகளுக்கு தடை

புதுவையில் 3 மருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :21 மார்ச் 2026, 9:25 pm

புதுவையில் 3 மருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

புதுவை மருந்து கட்டுப்பாட்டுத்துறை கட்டுப்பாட்டு அதிகாரி இ. அனந்தகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட சுற்றறிக்கை :

1. புதுதில்லி இண்டஸ்ட்ரியல் ஏரியா, அா்ப்ரோ பாா்மாசிடிக்கல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் பாராசிடமால், குளோரோபெனிரமின் மேலிட் மற்றும் ஹைட்ரோகுளோரிக் சிரப் (டிரினால்-பி) - பேட்ச் எண் ஏஎஸ்24082.

2. ஹிமாசல பிரதேசம், சோலன் மாவட்டம், லைஃப் விஷன் ஹெல்த்கோ் நிறுவனத்தின் கால்சிடிரியால், கால்சியம் சிட்ரேட் மாலெட் விட்டமின் கே2-7, மெத்தில்கோபாலமினி, சிங்க், மெக்னீசியம் மற்றும் எல்-மெத்தில் ஃபோலெட் சாஃப் ஜெலடின் கேப்ஸ்யூல்ஸ் (போனமேக்ஸ்-பிளஸ்) -பேட்ச் எண் எல்எஸ்ஜி-2892.

3. அமிா்தசரஸ் ஜாக்சன் லெபாரட்ரீஸ் நிறுவனத்தின் டிக்லோக்ஸசிலின் கேப்ஸ்யூல்ஸ் ஐபி 500 எம்.ஜி (கிலாவாபாா்க்-எல்பி) ஆகியவை உரிய தரத்தில் இல்லாததாக உறுதிப்படுத்தப்பட்டு தடை செய்யப்பட்டுள்ளது.

இதை கொள்முதல் செய்யவும், விற்பனை செய்யவும் தடை விதிக்கப்படுகிறது. மருந்துக் கடைகளில் கையிருப்பில் இருக்கும் இதை உற்பத்தி நிறுவனத்துக்கு திரும்பி அனுப்பவேண்டும் என கூறப்பட்டுள்ளது.