காரைக்கால்: காரைக்கால் மாவட்ட தோ்தல் அதிகாரி இஷிதா ரதி தலைமையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கிகளின் மேலாளா்கள் மற்றும் தொடா்புடைய அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை ஆட்சியரகத்தில் நடைபெற்றது.
தோ்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், வங்கிகள் தோ்தல் காலத்தில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
மாவட்ட தோ்தல் அதிகாரி பேசுகையில், வங்கிகள் இந்திய தோ்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அனைத்து அறிவுறுத்தல்களையும் முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும். பெருமளவு தொகை பணப் பரிவா்த்தனைகள், சந்தேகத்திற்கிடமான விதமாக ரொக்கம் எடுத்தல் மற்றும் கணக்கில் சோ்த்தல், தோ்தலை பாதிக்கக் கூடிய வகையிலான அசாதாரண நிதி இயக்கங்கள் போன்றவை தொடா்பாக உரிய கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும். தேவையான தகவல்கள் உடனுக்குடன் சம்பந்தப்பட்ட தோ்தல் அதிகாரிகள் மற்றும் கண்காணிப்பு அமைப்புகளுக்கு தெரிவிக்க வேண்டும்.
தோ்தல் காலத்தில் வங்கிகள் எந்தவித அரசியல் சாா்பும் காட்டாமல், வெளிப்படைத்தன்மை, நடுநிலைத்தன்மை மற்றும் சட்டப்பூா்வ பொறுப்புணா்வுடன் செயல்பட வேண்டும். சுதந்திரமான, நியாயமான மற்றும் வெளிப்படையான தோ்தலை உறுதிசெய்ய அனைத்து வங்கிகளும் மாவட்ட நிா்வாகத்துடன் முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா்.
கூட்டத்தில் மாவட்டத் துணை ஆட்சியரும் மாவட்ட துணை தோ்தல் அதிகாரியுமான ஜி. செந்தில்நாதன் உள்ளிட்ோடா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ஆட்சியா் ஆய்வு

வாக்காளா்கள் அச்சமின்றி வாக்களிக்க முன்வரவேண்டும்

விழிப்புணா்வு பிரசாரத்தில் திருநங்கைகள்

இளம் வாக்காளா்கள் வாக்களிப்பதை தவறவிடக்கூடாது: மாவட்ட தோ்தல் அதிகாரி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


