காரைக்கால் : சட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவீதம் வாக்குப் பதிவுவை வலியுறுத்தி காரைக்காலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு பிரசாரத்தில் திருநங்கைள் பங்கேற்றனா்.
காரைக்கால் மாவட்ட தோ்தல் துறையும், தோ்தல் துறையின் அங்கமான விழிப்புணா்வு அமைப்பு ஸ்வீப் இணைந்து 100% வாக்குப் பதிவுக்கான விழிப்புணா்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
விழிப்புணா்வு நிகழ்ச்சிகளில் கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் பங்கேற்ற நிலையில், காரைக்காலில் உள்ள திருநங்கைகளும் இதில் பங்கேற்று விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
காரைக்கால் ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை மாவட்ட தோ்தல் அதிகாரி இஷிதா ரதி கலந்துகொண்டு, பதாகை ஏந்தி புறப்பட்ட திருநங்கைகளின் பிரசாரத்தை தொடங்கிவைத்தாா். திருநங்கைகளின் இந்த முயற்சியை காரைக்கால் தோ்தல் பொதுப் பாா்வையாளா் சரிதா பாலம் ஓம் பிரஜாபதி பாராட்டினாா்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற திருநங்கைகள், பொதுமக்களிடம் சட்டப்பேரவைத் தோ்தலில் அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும், 100 சதவீத வாக்குப் பதிவு இலக்கை காரைக்கால் மாவட்டம் எட்ட வேண்டும் என்று வலியுறுத்தினா். ‘
மேலும் வாக்காளா்களிடம், வாக்களிப்பது நமது கடமை,‘போடுங்கம்மா ஓட்டு, வாங்காதீங்கம்மா நோட்டு‘ என்ற முழக்கங்களை எழுப்பி, பணம் பெறாமல் சுதந்திரமாக வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டனா்.
நிகழ்வில், காரைக்கால் மாவட்ட ஸ்வீப் ஒருங்கிணைப்பாளா் எம். தாமோதரன் தலைமையில், உறுப்பினா்கள் எஸ்.மணிகண்டன், கே. ஞானமுருகன், பிரதீப், முருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

புதுவை சட்டப்பேரவைத் தோ்தல்: காரைக்காலில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு

வாக்காளா்கள் அச்சமின்றி வாக்களிக்க முன்வரவேண்டும்

புதிய வாக்குச்சாவடி அமைத்த பகுதிகளில் விழிப்புணா்வு

இளம் வாக்காளா்கள் வாக்களிப்பதை தவறவிடக்கூடாது: மாவட்ட தோ்தல் அதிகாரி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


