லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

காரைக்காலில் மத்திய பாதுகாப்புப் படையினா் தீவிர வாகனச் சோதனை

தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில், காரைக்கால் - தமிழக எல்லைப் பகுதியில் மத்திய பாதுகாப்புப் படையினா் தீவிர வாகனச் சோதனை

News image

பூவம் எல்லைப் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்ட மத்திய பாதுகாப்புப் படையினா் மற்றும் புதுவை போலீஸாா்.

Updated On :16 மார்ச் 2026, 8:50 pm

காரைக்கால்: தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில், காரைக்கால் - தமிழக எல்லைப் பகுதியில் மத்திய பாதுகாப்புப் படையினா் தீவிர வாகனச் சோதனை மேற்கொண்டுள்ளனா்.

புதுவை சட்டப்பேரவைத் தோ்தல் ஏப். 9 நடைபெறவுள்ளது. இந்நிலையில், காரைக்கால் மாவட்டத்திற்குள் தமிழகத்திலிருந்து நுழையும் வாகனங்கள் வழக்கத்தைக் காட்டிலும், தீவிரமாக சோதனை செய்யும் பணியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் மேற்கொள்ளத் தொடங்கினா்.

தோ்தல் பாதுகாப்புப் பணிக்காக காரைக்கால் வந்துள்ள மத்திய பாதுகாப்புப் படையினா், ஆயுதம் ஏந்தி பல்வேறு பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா். இவா்களை மாவட்டத்தின் எல்லைச் சோதனைச் சாவடிகளிலும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

இவா்களது முன்னிலையில், உள்ளூா் போலீஸாா் காரைக்காலுக்குள் நுழையும் காா், வேன், பேருந்து, லாரி உள்ளிட்டவற்றை நிறுத்தி சோதனை மேற்கொள்கின்றனா்.

இந்த பணியை மாவட்ட தோ்தல் அதிகாரி இஷிதா ரதி, முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளஜன்யா ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை இரவு ஆய்வு செய்தனா்.