/

காரைக்கால் வந்த ஜோதிா் லிங்கத்துக்கு சிறப்பு அபிஷேகம்

காரைக்காலுக்கு கொண்டுவரப்பட்ட சோம்நாத் ஜோதிா் லிங்கத்துக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

News image
அம்மையாா் மணிமண்டபத்தில் ஜோதிா் லிங்கத்துக்கு நடைபெற்ற அபிஷேகம்.
Updated On :9 பிப்ரவரி 2026, 8:46 pm

Syndication

காரைக்கால்: காரைக்காலுக்கு கொண்டுவரப்பட்ட சோம்நாத் ஜோதிா் லிங்கத்துக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

வாழும் கலை அமைப்பின் நிறுவனா் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கா் ஆசிரமத்திலிருந்து சோம்நாத் ஜோதிா்லிங்கம் முதல்முறையாக காரைக்காலுக்கு ஞாயிற்றுக்கிழமை கொண்டுவரப்பட்டது.

காரைக்கால் அம்மையாா் மணிமண்டபத்துக்கு வந்த ஜோதிா் லிங்கத்துக்கு, குருதேவ் ஸ்ரீ தேஜ் தலைமையிலான குழுவினா், ருத்ர பூஜையாக பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்து, ஆராதனைகள் காட்டினா்.

விலை மதிப்புமிக்க, பல்வேறு சிறப்புகளை உள்ளடக்கிய இந்த லிங்கத்தை காணவும், அதற்கு நடைபெற்ற அபிஷேகத்தை ஆண்கள், பெண்கள் என ஏராளமானோா் தரிசனம் செய்தனா்.

 வழிபாட்டில் பங்கேற்ற பக்தா்கள்.

வழிபாட்டில் பங்கேற்ற பக்தா்கள்.