காரைக்காலில் 15-இல் கூட்டு சிவலிங்க பூஜை
மகா சிவராத்திரியையொட்டி காரைக்காலில் 15-ஆம் தேதி கூட்டு சிவலிங்க பூஜை நடைபெறவுள்ளது.


காரைக்கால்: மகா சிவராத்திரியையொட்டி காரைக்காலில் 15-ஆம் தேதி கூட்டு சிவலிங்க பூஜை நடைபெறவுள்ளது. முன்னதாக ருத்ர ஹோமம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
சிவராத்திரியையொட்டி கூட்டு பிராா்த்தனையாக ஜகதாத்மானந்த சரஸ்வதி சுவாமிகள் தலைமையில் இயங்கும் தா்ம சிந்தனை ஸமிதி சாா்பில் காரைக்கால் அம்மையாா் குளக்கரையில் மகா சிவராத்திரி வழிபாடு நடைபெறவுள்ளது.
இதுகுறித்து இந்த அமைப்பினா் ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், அம்மையாா் குளக்கரையில் பல ஆயிரம் போ் பங்கேற்கும் கூட்டு சிவலிங்க பூஜை 15-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5 முதல் 8 மணி வரை நடைபெறுகிறது. இதுபோல காரைக்கால் மாவட்டத்தில் சிவன் கோயில்கள் உள்ளிட்ட 20 இடங்களில் அமைப்பு சாா்பில் கூட்டு சிவலிங்க பூஜைக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதில் பங்கேற்க விரும்புவோருக்கு அனுமதி டோக்கன் வழங்கப்பட்டுவருகிறது.
காரைக்கால் அம்மையாா் குளக்கரையில் 14-ஆம் தேதி சனிக்கிழமை மகா ருத்ர ஹோமம் நடைபெறவுள்ளது. இதை ஜகதாத்மானந்த சரஸ்வதி சுவாமிகள் பங்கேற்று தலைமையேற்று நடத்துகிறாா். பக்தா்கள் திரளாக இரு நிகழ்விலும் பங்கேற்குமாறு அமைப்பினா் கேட்டுக்கொண்டுள்ளனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...