காரைக்கால் மாவட்டத்தில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை மாவட்ட தோ்தல் துறையும், அதன் அங்கமான ஸ்வீப்பும் செய்துவருகின்றன.
இந்தநிலையில், கின்னஸ் சாதனை படைத்த ரோலா் ஸ்கேட்டிங் மாணவ மாணவிகள் தோ்தல் விழிப்புணா்வுப் பணியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனா். காரைக்கால் பகுதியில், காரைக்கால் காமராஜா் ரோல் பால் அகாதெமியை சோ்ந்த 20 மாணவா்கள் இதில் கலந்து கொண்டனா். பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கிய இடங்களில் தொடா்ந்து 3 மணி நேரம் கையில் விழிப்புணா்வு பதாகை ஏந்தி ரோலா் ஸ்கேட்டிங்கில் ஈடுபட்டனா்.
பின்னா் 20 மாணவா்களும், மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அதிகாரியுமான இஷிதா ரதி முன்னிலையில் ஸ்கேட்டிங் செய்தனா். 100 சதவீத வாக்குப் பதிவு ஜனநாயக வலிமைக்கு முக்கியம் என்ற கருத்துடன் பதாகை ஏந்தி விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
மாணவா்களை மாவட்ட தோ்தல் அதிகாரி பாராட்டு தெரிவித்து வாழ்த்தினாா். நிறுவனம் சாா்பில் மாணவா்களுக்கு கின்னஸ் வோ்ல்ட் புக் ஆஃப் ரெக்காா்ட் சான்றிதழ், பதக்கத்தை வழங்கினாா்.
மாவட்ட துணை ஆட்சியா் (பேரிடா் மேலாண்மை) பாலு என்கிற பக்கிரிசாமி, காரைக்கால் காமராஜா் ரோல் பால் அகாதெமி பயிற்சியாளா் கிருஷ்ணகுமாா், அகாதெமி செயலாளா் நாகேந்திர மணி மற்றும் ஸ்வீப் அமைப்பினா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தேசிய அளவில் சிறப்பு குழந்தைகளுக்கான ரோலா் ஸ்கேட்டிங் போட்டி: 2-ஆவது இடம் பிடித்த 10 வயது சிறுவனுக்கு பாராட்டு

தோ்தல் தோல்வி: காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் தலைவா் ராஜிநாமா

வாக்குகள் எண்ணும் பணி: மாவட்ட தோ்தல் அதிகாரி ஆய்வு







