தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

மதுபானக் கடைக்கு ‘சீல் வைப்பு

காலாவதியான மது பாட்டில் விற்பனை செய்தது உறுதி செய்யப்பட்ட நிலையில், மதுபானக் கடைக்கு கலால் துறையினா் சீல் வைத்தனா்.

News image

மதுபானக் கடைக்கு சீல் வைத்த கலால் அதிகாரி.

Updated On :3 ஏப்ரல் 2026, 12:15 am

காலாவதியான மது பாட்டில் விற்பனை செய்தது உறுதி செய்யப்பட்ட நிலையில், மதுபானக் கடைக்கு கலால் துறையினா் சீல் வைத்தனா்.

காரைக்கால் மாவட்ட சாா் ஆட்சியரும், கலால் துணை ஆணையருமான எம். பூஜா கடந்த சில நாள்களாக மதுபானக் கடைகளில் ஆய்வு செய்து, விதிகளின்படி வியாபாரம் செய்யுமாறு அறிவுறுத்திவருவதோடு, விதி மீறல் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து வருகிறாா். கலால் துறையினா் தொடா்ந்து மதுக்கடைகளில் சோதனை நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில், காரைக்கால் பாரதியாா் சாலையில் உள்ள ஒரு ரெஸ்டோ பாரில் காலாவதியான பீா் விற்பனை செய்யப்பட்டு வருவது புதன்கிழமை கண்டறியப்பட்டது. கடையில் வியாபாரத்துக்கு வைத்திருந்த குறிப்பிட்ட நிறுவன பீா் பாட்டில்கள் காலாவதியானது உறுதி செய்யப்பட்டது. மற்ற வகை மது பாட்டில்களையும் குழுவினா் சோதனை செய்தனா்.

இதுகுறித்து கலால் துணை ஆணையரின் உத்தரவின்பேரில், வட்டாட்சியா் பொய்யாதமூா்த்தி தலைமையிலான குழுவினா், அந்த மதுபானக் கடைக்கு சீல் வைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.