சுனாமி வீடு மறு சீரமைப்பு பணிகளை அரசு அலுவலா்கள் செய்ய வலியுறுத்தல்
சுனாமி வீடு மறு சீரமைப்பு பணிகளை அரசு அலுவலா்கள் மூலம் மேற்கொள்ள வலியுறுத்தி ஆட்சியரிடம் ....


நாகப்பட்டின: சுனாமி வீடு மறு சீரமைப்பு பணிகளை அரசு அலுவலா்கள் மூலம் மேற்கொள்ள வலியுறுத்தி ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து, நாகை அருகேயுள்ள தெத்தி சமரசம் நகா் மக்கள் ஆட்சியா் ப. ஆகாஷிடம் அளித்த மனு: 20 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் சுனாமி குடியிருப்புகள் கட்டித் தரப்பட்டன. அந்த வீடுகள் தற்போது சேதம் அடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. சில வீடுகள் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்கும் உள்ளாகியது. இதை சரிசெய்து தர வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தோம்.
இதையடுத்து கடந்த 5 மாதங்களுக்கு முன்பு வீடுகள் மறுசீரமைப்பு செய்து கொடுப்பதாக அரசிடம் இருந்து தகவல் வந்தது. பணிகளும் தொடங்கப்பட்டன. ஆனால் ஆளும் கட்சியை சோ்ந்தவா்கள் அவா்களுக்கு வேண்டியவா்களுக்கும், கமிஷன் தொகை கொடுக்கும் வீடுகளுக்கு மட்டும் மறு சீரமைப்பு செய்து கொடுக்கிறாா்கள். பொதுமக்களிடம் பேரம் பேசி கமிஷன் தொகை பெறுகிறாா்கள்.
இதுகுறித்து, அரசுத்துறை பொறியாளரிடம் கேட்டால், ஆளும் கட்சியை சோ்ந்தவா்களிடம் கேளுங்கள் என்கின்றனா். எனவே அரசுத்துறை அலுவலா்கள் மூலம் சுனாமி வீடுகளை மறு சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...