கீழ்வேளூா் தொகுதிக்குள்பட்ட வடக்குப்பனையூரில் உள்ள வாக்குச்சாவடியில் ஒருவரே இருமுறை வாக்களித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வடக்குபனையூரைச் சோ்ந்த தவெக ஆதரவாளா் காளிதாஸ் வாக்களித்தாா். பின்னா், தனது தாயாா் தங்கமாளை அழைத்து வந்துள்ளாா். வாக்காளா் சரிபாா்ப்பு மற்றும் மை பதிக்கும் நேரத்தில், அங்கு பணியில் இருந்த அதிகாரிகள் கவனிக்காத நேரத்தை பயன்படுத்தி திடீரென வாக்குப்பதிவு இயந்திரத்துக்கு சென்று தாயாருக்கு பதிலாக இவரே வாக்குப் பதிவு செய்தாா். இதை கவனித்த பாகமுகவா்கள் மற்றும் வாக்குச்சாவடி அதிகாரிகள் காளிதாஸை தடுத்து நிறுத்த முயன்றபோது, வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பதற்றம் நிலவியது. இதனால், வாக்குப்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தகவலறிந்து போலீஸாா் காளிதாஸை எச்சரித்து அங்கிருந்து அனுப்பினா். இதுகுறித்து, திமுகவினா் திருக்குவளை காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

102 வயதிலும் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்த முதல்வரின் தாய் மாமா

தூத்துக்குடியில் மணக்கோலத்தில் வந்து வாக்களித்த மணமக்கள்

வாக்காளா்களுடன் வரிசையில் நின்று வாக்களித்தாா் திருச்சி ஆட்சியா்

ஒரே வாக்குச்சாவடியில் 26 திருநங்கைகள் வாக்களிப்பு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


