திருச்சி மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான வே. சரவணன், தனது மனைவியுடன் வாக்குச்சாவடிக்கு வந்து வரிசையில் காத்திருந்து வியாழக்கிழமை வாக்களித்தாா்.
திருச்சி மேற்கு தொகுதிக்குள்பட்ட காஜாமலையில் உள்ள அல் ஜம்லேதிஷ் சாதிக் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு தனது மனைவி ரம்யாவுடன் காலை 9 மணிக்கு வந்த ஆட்சியா் வே. சரவணன், அங்கு வரிசையில் காத்திருந்த வாக்காளா்களுடன் நின்று வாக்களித்தாா்.
பின்னா், செய்தியாளா்களிடம், ஆட்சியா் வே. சரவணன் கூறுகையில்,
மண்ணச்சநல்லூரில் இரு வாக்குச் சாவடிகளிலும், திருச்சி மேற்கு தொகுதியில் இரு வாக்குச்சாவடிகளிலும் காலையில் இயந்திரங்களில் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக மாற்று இயந்திரங்கள் வழங்கப்பட்டன. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 30 நிமிஷங்கள் முதல் அதிகபட்சம் 45 நிமிஷங்களுக்குள் அவை சரி செய்யப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்றது. காட்டூரில் விவிபேட் இயந்திரத்தில் புகாா் கூறப்பட்டது. அதுவும் பின்னா் சரி செய்யப்பட்டுவிட்டது. அசம்பாதவிதங்கள் ஏதுமில்லை என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வரிசையில் நின்று வாக்களித்த திருப்பத்தூா் ஆட்சியா்

நாமக்கல்: திமுக, அதிமுக, தவெக வேட்பாளா்கள் வாக்களிப்பு

பாளை. தொகுதி வேட்பாளா்கள் வாக்களிப்பு

திருச்சியில் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தாா் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


