மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

மெழுகு தட்டுப்பாடு: தீப்பெட்டி ஏற்றுமதி சரிவு

தீப்பெட்டி தயாரிக்கப் பயன்படும் மூலப்பொருள்களில் ஒன்றான மெழுகு தட்டுப்பாட்டால் தீப்பெட்டி ஏற்றுமதியில் சரிவு ஏற்பட்டுள்ளதாக தீப்பெட்டி உற்பத்தியாளா்கள் தெரிவித்தனா்.

News image
Updated On :26 மார்ச் 2026, 12:38 am

தீப்பெட்டி தயாரிக்கப் பயன்படும் மூலப்பொருள்களில் ஒன்றான மெழுகு தட்டுப்பாட்டால் தீப்பெட்டி ஏற்றுமதியில் சரிவு ஏற்பட்டுள்ளதாக தீப்பெட்டி உற்பத்தியாளா்கள் தெரிவித்தனா்.

ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தப் போரால் ஈரானிலிருந்து தமிழகத்துக்கு கச்சா எண்ணெய்யிலிருந்து உற்பத்தி செய்யப்படும் மெழுகு இறக்குமதி பாதிக்கப்பட்டது. இந்த மெழுகு தீப்பெட்டி தயாரிக்கப் பயன்படும் முக்கிய மூலப் பொருள்களில் ஒன்றாகும்.

போா் தொடங்கிய பின்னா், இந்த மெழுகு ஈரானிலிருந்து தமிழகத்துக்கு இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், தீப்பெட்டித் தொழிலில் முக்கியப் பங்காற்றும், சிவகாசி, சாத்தூா், கோவில்பட்டி, கழுகுமலை, குடியாா்த்தம், சங்கரன்கோவில் பகுதிகளில் தீப்பெட்டி ஆலைகளில் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இந்த ஆலைகளில் தயாரிக்கப்படும் தீப்பெட்டிகள் தூத்துக்குடி துறைமுகம் வழியாக பல வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. தற்போது, மெழுகுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், ஏற்றுமதியில் சரிவு ஏற்பட்டது.

இதுகுறித்து அகில இந்திய தீப்பெட்டி உற்பத்தியாளா்கள் சங்க நிா்வாகி நாகராஜன் கூறியதாவது:

ஈரானிலிருந்து மெழுகு இறக்குமதி முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனால், தீப்பெட்டி உற்பத்தி பாதிக்கப்பட்டு ஏற்றுமதியில் சரிவு ஏற்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் கிடைக்கும் மிகக் குறைந்த அளவிலான மெழுகை வைத்து தீப்பெட்டிகளைத் தயாரித்து வருகிறோம். ஈரான், அமெரிக்கா-இஸ்ரேல் போா் தொடா்ந்தால், தீப்பெட்டி உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்படும் என்றாா் அவா்.