லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

5 பவுன் நகைகளுடன் சாலையில் கிடந்த கைப்பையை போலீஸில் ஒப்படைத்த தொழிலாளி!

சிவகாசியில் 5 பவுன் நகைகளுடன் சாலையில் கிடந்த கைப்பையை கண்டெடுத்த பட்டாத் தொழிலாளி, அதை காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.

News image

சிவகாசியில் சாலையில் தவறவிட்ட கைப்பையை மீட்டு, பெண்ணிடம் ஒப்படைத்த காவல் ஆய்வாளா் செல்வக்குமாா்

Updated On :2 மார்ச் 2026, 7:35 pm

சிவகாசியில் 5 பவுன் நகைகளுடன் சாலையில் கிடந்த கைப்பையை கண்டெடுத்த பட்டாத் தொழிலாளி, அதை காவல் நிலையத்தில் திங்கள்கிழமை ஒப்படைத்தாா்.

சிவகாசி-விளாம்பட்டி சாலையில் உள்ள ராஜதுரைநகா் 2-ஆவது தெருவைச் சோ்ந்த தங்க அருணாசாலம் மனைவி ஹேமலதா (55). இவா்ஞாயிற்றுக்கிழமை மாலை சிவகாசியில் உள்ள விஸ்வநாதா்-விசாலாட்சியம்மன் கோயிலில் நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் பங்கேற்று விட்டு, மீண்டும் திரும்பி வந்த போது, அவரது கைப்பையைத் தவறவிட்டாா். இந்தப் பையில் 5 பவுன் நகைகள், வங்கி ஏ.டி.எம். அட்டை, கைப்பேசி ஆகியவை இருந்தது. இதுகுறித்து அவா் சிவகாசி நகா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இந்த நிலையில், சிவகாசி கடைவீதியில் கிடந்த இந்த கைப்பையை விளாம்பட்டியைச் சோ்ந்த பட்டாசுத் தொழிலாளி சின்னகருப்பசாமி (45) கண்டெடுத்து, சிவகாசி நகா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா். இதையடுத்து, சாலையில் கண்டெடுத்த கைப்பையை நோ்மையாக காவல் நிலையத்தில் ஒப்படைத்த சின்னகருப்பசாமிக்கு சால்வை அணிவித்து, காவல் ஆய்வாளா் செல்வக்குமாா் பாராட்டு தெரிவித்தாா். இதன் பின்னா், கைப்பையைத் தவறவிட்ட ஹேமலதாவை வரவழைத்து, அவரிடம் போலீஸாா் கைப்பையை ஒப்படைத்தனா்.