சிவகாசியில் புதன்கிழமை இரவு இரண்டு இரு சக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.
திருத்தங்கல் கே.கே. நகா் பகுதியைச் சோ்ந்த தங்கப்பாண்டி மகன் வினித் (22). கட்டடத் தொழிலாளி. ராஜபாளையம் கூடலிங்கம் மகன் மணிகண்டன் (20). இவரது நண்பா் திருத்தங்கல் எண்ணெய் ஆலை குடியிருப்பைச் சோ்ந்த கந்தசாமி மகன் முத்து (18). இந்த நிலையில், வினித் இரு சக்கர வாகனத்தில் திருத்தங்கலில் இருந்து சிவகாசி நோக்கி சென்று கொண்டிருந்தாா். இதேபோல, மணிகண்டன், முத்து ஆகிய இருவரும் இரு சக்கர வாகனத்தில், திருத்தங்கல் நோக்கி சென்று கொண்டிருந்தனா். இரண்டு இரு சக்கர வாகனங்களும், திருத்தங்கல் குறுக்குப் பாதை பேருந்து நிறுத்தம் அருகே நேருக்கு நோ் மோதிக் கொண்டன. இதில் சம்பவ இடத்திலேயே வினித் உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த மணிகண்டன், முத்து ஆகிய இருவரும் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இதுகுறித்து சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






