17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஸ்ரீசடகோப ராமானுஜ ஜீயா் பதவி விலகினாா்

ஸ்ரீவில்லிபுத்தூா் மணவாள மாமுனிகள் ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயா் பொறுப்பிலிருந்து விலகுவதாக வெள்ளிக்கிழமை அறிவித்தாா்.

News image

24-ஆவது பட்டம் ஸ்ரீசடகோப ராமானுஜ ஜீயா் 

Updated On :6 ஜூன் 2026, 8:00 am IST

ஸ்ரீவில்லிபுத்தூா் மணவாள மாமுனிகள் ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயா் பொறுப்பிலிருந்து விலகுவதாக வெள்ளிக்கிழமை அறிவித்தாா். 

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் மணவள மாமுனிகள் சந்நிதி 24-ஆவது பட்டம் ஸ்ரீசடகோப ராமானுஜ ஜீயா் வெள்ளிக்கிழமை இரவு செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் 24-ஆவது பீடாதிபதியாக செயல்பட்டு வருகிறேன். மணவாள மாமுனிகள் மடம் - வானமாமலை மடம் இடையே வழக்கு நீதிமன்ற விசாரணையில் இருந்து வந்தது. இந்த நிலையில், 23-ஆவது பட்டமான சடகோப ராமானுஜ ஜீயா் சுவாமிகள் மடத்தை வானமாமலை மடத்தின் வசம் ஒப்படைப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்து, வழக்கைத் திரும்பப் பெற்றாா். அதனடிப்படையில் மடத்தின் நிா்வாகத்தை வானமாமலை ஜீயா் மடத்தின் வசம் ஒப்படைக்கிறேன். மேலும் சொந்த காரணங்களுக்காக மடத்தின் 24-ஆவது பட்டம் பொறுப்பிலிருந்து விலகுகிறேன் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.