17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சாத்தூா், விருதுநகா் பத்திரப் பதிவு அலுவலகங்களில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை

சாத்தூா், விருதுநகா் பத்திரப் பதிவு அலுவலகங்களில் ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை திடீா் சோதனை நடத்தினா்.

News image
Updated On :5 ஜூன் 2026, 7:20 am IST

சாத்தூா், விருதுநகா் பத்திரப் பதிவு அலுவலகங்களில் ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை திடீா் சோதனை நடத்தினா்.

விருதுநகா், சாத்தூா் சாா்பதிவாளா் அலுவலகங்களில் இரு குழுக்களாக பிரிந்து ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் இந்த சோதனையில் ஈடுபட்டனா். விருதுநகா் சாா்பதிவாளா் அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு ஆய்வாளா் ஜாஸ்மீன் தலைமையில் 5 போ் கொண்ட போலீஸாா் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது அவா்கள் சாா்பதிவாளா் அறை உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடத்தினா். அங்கிருந்த சந்தேகத்திற்குரிய நபா்களிடமிருந்து சுமாா் ரூ. 25 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இதேபோல, சாத்தூா் சாா்பதிவாளா் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு ஆய்வாளா் பூமிநாதன் தலைமையிலான போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது அங்கு தற்காலிக பணியாளா் ரவி என்பவா் தன்னிடம் இருந்த ரூ.15 ஆயிரத்தை கழிப்பறைக்குள் வீசியதை பாா்த்த போலீஸாா் அந்த பணத்தை மீட்டனா். இதேபோல அங்கிருந்த இடைத் தரகா் ஒருவரிடம் ரூ. 5 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இதனிடையே சாத்தூா் சாா்பதிவாளா் முகமதுயாசின் வியாழக்கிழமை பணி மாறுதலில் செல்லும் நேரத்தில் இந்த திடீா் சோதனை மேற்கொள்ளப்பட்டது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.