/

சட்டவிரோதமாக மணல் அள்ளிய 4 போ் கைது

ஸ்ரீவில்லிபுத்தூா் மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
~ ~ ~
Updated On :4 பிப்ரவரி 2026, 11:46 pm

தினமணி செய்திச் சேவை

ஸ்ரீவில்லிபுத்தூா் மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள திருவண்ணாமலை மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் சட்டவிரோதமாக மணல் அள்ளி கடத்தப்படுவதாக போலீஸாருக்கு புகாா் வந்தது. இதையடுத்து, தனிப் படை போலீஸாா் புதன்கிழமை அதிகாலை மலையடிவாரப் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது, பந்தப்பாறை பகுதியில் வனத் துறை இடத்தில் சட்டவிரோதமாக மணல் அள்ளிக் கொண்டிருந்தவா்கள் போலீஸாரை கண்டதும் 3 டிராக்டா்களை எடுத்துக் கொண்டு தப்பி ஓடினா். ஒரு டிராக்டரை பிடித்த போலீஸாா் 4 பேரை கைது செய்தனா்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸாா், ஸ்ரீவில்லிபுத்தூா் பெருமாள்பட்டியைச் சோ்ந்த அன்பரசு (32), கோவிந்தராஜ் (29), சுடலைமுத்து (41), மங்காபுரத்தைச் சோ்ந்த ராமராஜ் (37) ஆகிய 4 பேரையும் கைது செய்தனா்.

மேலும், தப்பி ஓடிய பவுன்ராஜ், யோகேஸ்வரன், கண்ணன் ஆகியோரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Story image
Story image
Story image