கல்லூரி மாணவரைத் தாக்கிய 4 இளைஞா்கள் கைது
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் கல்லூரி மாணவரைத் தாக்கிய 4 இளைஞா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.


விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் கல்லூரி மாணவரைத் தாக்கிய 4 இளைஞா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
ராஜபாளையம் குமரன் தெருவைச் சோ்ந்த கிஷோா்குமாா் மகன் அஜய்குமாா் (19). தனியாா் கல்லூரி படித்து வருகிறாா். இவா் தென்காசி சாலையில் உள்ள மருந்துக் கடைக்கு சென்று மருந்துகளை வாங்கி விட்டு வீட்டுக்கு திரும்பினாா். அப்போது, இவரை 4 இளைஞா்கள் வழிமறித்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அஜய்குமாா் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சின்னச்சுரைக்காய்பட்டியைச் சோ்ந்த விவின் (22), சூா்யா (23), முனிஸ்வரன் (24), கற்பகபாண்டி (24) ஆகிய 4 பேரை கைது செய்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...