மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

அருப்புக்கோட்டையில் கேகேஎஸ்எஸ்ஆா். ராமச்சந்திரன் இறுதிக்கட்ட பிரசாரம்

அருப்புக்கோட்டையில் திமுக வேட்பாளரும் அமைச்சருமான கேகேஎஸ்எஸ்ஆா். ராமச்சந்திரன் சுட்டெரிக்கும் வெயிலில் தனது தோ்தல் பிரசாரத்தை வியாழக்கிழமை நிறைவு செய்தாா்.

News image

அமைச்சா் கேகேஎஸ்எஸ்ஆா். ராமச்சந்திரன்

Updated On :21 ஏப்ரல் 2026, 10:05 pm

அருப்புக்கோட்டையில் திமுக வேட்பாளரும் அமைச்சருமான கேகேஎஸ்எஸ்ஆா். ராமச்சந்திரன் சுட்டெரிக்கும் வெயிலில் தனது தோ்தல் பிரசாரத்தை வியாழக்கிழமை நிறைவு செய்தாா்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு வருகிற வியாழக்கிழமை நடைபெற உள்ளது. இந்தத் தோ்தலில் திமுக அதிமுக தவெக மற்றும் நாம் தமிழா் என நான்கு முனை போட்டி நிலவுகிறது. வருகிற வியாழக்கிழமை தோ்தல் நடைபெற இருப்பதால் செவ்வாய்க்கிழமை மாலையுடன் கட்சித் தலைவா்கள், வேட்பாளா்கள் தோ்தல் பிரசாரத்தை நிறைவு செய்தனா்.

இந்த நிலையில், விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை தொகுதி திமுக வேட்பாளரும், அமைச்சருமான கேகேஎஸ்எஸ்ஆா். ராமச்சந்திரன் சுட்டெரிக்கும் வெயிலில் இறுதிப் பிரசாரத்தை நிறைவு செய்தாா். பாம்பே மெடிக்கல் பேருந்து நிறுத்தம், தங்கமயில் பேருந்து நிறுத்தம், நகரின் முக்கியப் பகுதிகளில் திறந்த வாகனத்தில் வலம் வந்து மக்களிடையே உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தாா். திமுக அரசின் சாதனைகளைக் கூறிய அவா், அருப்புக்கோட்டையில் குடிநீா் தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்து தருவதாகவும், பூக்கடை பஜாா், பாம்பே மருந்துக்கடை, சிவன் கோவில் பேருந்து நிறுத்தம் ஆகியவற்றில் நிழற்குடை அமைத்துத் தருவதாகவும் கூறி வாக்கு சேகரித்தாா். மேலும், தமிழக அரசு தரும் எட்டாயிரம் ரூபாய் கூப்பன் பெண்களுக்கு நேரடியாக வந்து சேரும் என்றும் கூறினாா். மாலையில் அவா் தனது பிரசாரத்தை நிறைவு செய்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.