நிலக்கடலை சாகுபடி: காரியாபட்டி விவசாயிகள் ஆர்வம்
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நிலக்கடலை சாகுபடியை விவசாயிகள் முன்கூட்டியே துவக்கியுள்ளனர்.


விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நிலக்கடலை சாகுபடியை விவசாயிகள் முன்கூட்டியே துவக்கியுள்ளனர்.
மாவட்டத்திலேயே காரியாபட்டி வட்டாரத்தில் தான் அதிகளவு நிலக்கடலை சாகுபடி செய்யப்படுகிறது.
நடப்பாண்டு கோடையில் நல்ல மழை பெய்துள்ளது. காரியாபட்டி, வட்டார விவசாயிகள் மழையை பயன்படுத்தி முடுக்கன்குளம், வரலொட்டி, தோப்பூர், ஆவியூர், குரண்டி உள்ளிட்ட கிராமங்களில் கடலை சாகுபடி பணியில் ஈடுபட்டுள்ளனர். மழை ஈரத்தை பயன்படுத்தி முன்கூட்டியே விதைப்பு செய்துள்ளனர்.
இதுபற்றி விவசாய அலுவலர் சங்கரன் கூறியதாவது: உழவர் ஆர்வலர் குழுக்களுக்கு நிலக்கடலை விதைப்பான், பிரித்தெடுப்பான், கடலை உடைப்பு கருவிகள் வழங்கியுள்ளோம். விதைப்பு கருவிகள் மூலம் குறைந்த விதையளவு, சீரான பயிர் செய்து 15 சதவீத கூடுதல் மகசூல் பெறலாம். குழுக்களிடம் கருவிகள் வாடகைக்கு கிடைக்கும். தேவைப்படுவோர் காரியாபட்டி வேளாண்மை விரிவாக்க மையத்தை தொடர்பு கொள்ளலாம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...