திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா

காரியாபட்டி, மல்லாங்கிணறு பகுதி கிராமங்களில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா ஒன்றிய அதிமுக சார்பில் கொண்டாடப்பட்டது. ஒன்றியச் செயலர் ராமமூர்த்தி அதிமுக கொடியினை ஏற்றி வைத்து

Updated On :18 ஜனவரி 2015, 6:49 pm

காரியாபட்டி, மல்லாங்கிணறு பகுதி கிராமங்களில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா ஒன்றிய அதிமுக சார்பில் கொண்டாடப்பட்டது. ஒன்றியச் செயலர் ராமமூர்த்தி அதிமுக கொடியினை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி பேசினார்.

விவசாயப் பிரிவு செயலர் முத்துப்பாண்டி, ஒன்றியக்குழுத் தலைவர் முத்துலெட்சுமி, மாவட்ட இலக்கிய அணி செயலர் முருகன், பேரவை துணை செயலர் வாலைமுத்துசாமி உள்பட அதிமுக நிர்வாகிகள் திரளாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

சோலைக்கவுண்டன்பட்டி, குரண்டி, கல்குறிச்சி, மல்லாங்கிணறு, அண்ணாநகர், பிசிண்டி, அச்சங்குளம் உள்பட பல கிராமங்களில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.