/

காரியாபட்டியில் பிளாஸ்டிக் பயன்பாடு: இணை இயக்குநர் ஆய்வு

காரியாபட்டி மற்றும் மல்லாங்கிணர் பேரூராட்சியில் பாலிதீன் பயன்பாடு குறித்து மதுரை மண்டல பேரூராட்சிகளின் இணை இயக்குநர் குணசேகரன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 6:31 am

கல்யாணி வெங்கடராமன்

காரியாபட்டி மற்றும் மல்லாங்கிணர் பேரூராட்சியில் பாலிதீன் பயன்பாடு குறித்து மதுரை மண்டல பேரூராட்சிகளின் இணை இயக்குநர் குணசேகரன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின்போது ஒரு சில கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த பாலிதீன் பைகள் மற்றும் பிளாஸ்டிக் கப்களை பறிமுதல் செய்தனர். பாலிதீன் பைகளுக்கு பதிலாக வெள்ளை துணிப்பை பயன்பாட்டிற்கு வைத்திருந்தனர். அந்த பையும் மெழுகு கலந்து தயாரிக்கப்படுவதால் நச்சுத்தன்மை இருப்பதாக கூறி தீ வைத்து எரித்து காண்பித்து, நச்சுத்தன்மை உள்ள பைகள் பயன்படுத்தக்கூடாது என எச்சரிக்கை விடுத்தார். ஆய்வின்போது செயல் அலுவலர் ஜெயசந்திரசேகரன், அலுவலர் அன்பழகன் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.