காரியாபட்டியில் போக்குவரத்துக்கழக பணிமனைக்கு இடம் தேர்வு செய்வதில் இழுபறி நீடிக்கிறது.
காரியாபட்டியைச் சுற்றி 120-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு அரசு போக்குவரத்துக்கழக பணிமனை தொடங்க கடந்த 2009-இல் அரசு உத்தரவிட்டு, தனியார் இடத்தில் அமைக்கப்பட்டது. இந்த இடத்தில் அடிப்படை வசதிகள் கிடையாது. சாலை குண்டும், குழியுமாக மழைக்காலங்களில் சேறும் சகதியாக மாறிவிடுகிறது. வெயில் காலங்களில் புழுதி பறக்கிறது. டீசல் பங்க் கிடையாது. பணியாளர்களுக்கு ஒய்வறை கிடையாது.
இந்நிலையில் இரண்டரை ஆண்டுகளுக்கு முன் சட்டப்பேரவையில் பணிமனைக்கு சொந்த கட்டிடம் கட்டப்படும் என முதல்வர் அறிவித்தார். இதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டது. ஆனால், இதுவரை இடம் தேர்வு செய்யப்படவில்லை. பேருந்து நிலையத்திலிருந்து 3 கி.மீ., தொலைவில் உள்ள பிச்சம்பட்டியில் இடம் தேர்வு செய்தனர். ஆனால் அங்கு இடவசதி இல்லை என கை விட்டனர். இதுபோல 3 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு நிராகரிக்கப்பட்டுள்ளது. எனவே அதிகாரிகள் முழு ஆர்வத்துடன் செயல்பட்டு பணிமனைக்கு இடம் தேர்வு செய்ய வேண்டும் என காரியாபட்டி பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!

ரிஷப ராசிக்கு மகிழ்ச்சி: தினப்பலன்கள்!
எடப்பாடி பழனிசாமி பிரசாரத்துக்கு தடை கோரிய வழக்கு தீா்ப்புக்காக ஒத்திவைப்பு!

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை விரும்பும் மக்கள்: சந்திரபாபு நாயுடு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

