காரியாபட்டி அருகே கூடுதல் வரதட்சிணை கேட்டு, பெண்ணை வீட்டை விட்டு விரட்டியதாக கணவர், மாமியார் கைது செய்யப்பட்டனர்.
காரியாபட்டி அருகே தோணுகாலைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். இவரது மனைவி ராஜாமணி (வயது32). இவர்களுக்கு திருமணமாகி 13 வருடங்களாகி விட்டது. திருமணத்தின் போது 10 பவுன் நகை மற்றும் ரொக்கம் கொடுத்துள்ளனர். இந்நிலையில் மோகன்ராஜ் வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததால், அவரது மனைவி தட்டிக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த இவரது கணவரும், மாமியாரும் நகை மற்றும் பணம் வாங்கி வருமாறு கூறி ராஜாமணியைத் துன்புறுத்தியதுடன், வீட்டை விட்டு விரட்டி விட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ராஜாமணி கொடுத்த புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலா, சப்-இன்ஸ்பெக்டர் முத்துலெட்சுமி ஆகியோர் வழக்குப் பதிவு செய்து மோகன்ராஜ் மற்றும் அவரது தாயார் ஜெயபாக்கியம் ஆகியோரைக் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!

ரிஷப ராசிக்கு மகிழ்ச்சி: தினப்பலன்கள்!
எடப்பாடி பழனிசாமி பிரசாரத்துக்கு தடை கோரிய வழக்கு தீா்ப்புக்காக ஒத்திவைப்பு!

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை விரும்பும் மக்கள்: சந்திரபாபு நாயுடு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

