திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா

விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணர் பகுதியில் எம்.ஜி.ஆர். பிறந்த நாளை  முன்னிட்டு 20-க்கும் மேற்பட்ட இடங்களில் வியாழக்கிழமை இரவில் காரியாபட்டி  ஒன்றிய அதிமுக செயலர் கரியனேந்தல் ராமமூர்த்தி அதிமுக கொடியினை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

Updated On :19 ஜனவரி 2013, 7:51 pm

விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணர் பகுதியில் எம்.ஜி.ஆர். பிறந்த நாளை  முன்னிட்டு 20-க்கும் மேற்பட்ட இடங்களில் வியாழக்கிழமை இரவில் காரியாபட்டி  ஒன்றிய அதிமுக செயலர் கரியனேந்தல் ராமமூர்த்தி அதிமுக கொடியினை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

 மல்லாங்கிணர், அயன்ரெட்டியபட்டி விலக்கு, நந்திக்குண்டு, பெரியபுளியம்பட்டி, கல்குறிச்சி உள்பட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிமுக கொடியேற்றும் விழா  நடைபெற்றது.

 பேரூராட்சி துணைத் தலைவர் மணிராஜ், கிளைச் செயலர்கள் வீரு, ராஜாராம்,  கருப்புராஜா ஆகியோர் நிகழ்ச்சிகளுக்குத் தலைமை வகித்தனர்.

 அதிமுக நிர்வாகிகள் துரைப்பாண்டி, ஜான் பாக்கியராஜ், தங்கராசு, பஞ்சவர்ணம்  உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.