திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

நேரு யுவகேந்திரா விளையாட்டுப் போட்டிகள்

விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணரில் நேரு யுவகேந்திரா மன்றங்களுக்கிடையேயான விளையாட்டுப் போட்டிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.     நேரு யுவகேந்திரா மாவட்ட இளைஞர் ஒருங்கிணைப்பாள

Updated On :19 பிப்ரவரி 2013, 9:20 pm

விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணரில் நேரு யுவகேந்திரா மன்றங்களுக்கிடையேயான விளையாட்டுப் போட்டிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன. 

   நேரு யுவகேந்திரா மாவட்ட இளைஞர் ஒருங்கிணைப்பாளர் இராபர்ட் ஜேம்ஸ் தலைமை வகித்தார். கெப்பிலிங்கம்பட்டி நண்பர்கள் இளைஞர் நற்பணிமன்றத் தலைவர் பிச்சை முன்னிலை வகித்தார்.     மல்லாங்கிணர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் கருப்பசாமி விளையாட்டுப் போட்டிகளைத் துவக்கி வைத்தார். போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு காரியாபட்டி ஒன்றியக்குழு தலைவர் முத்துலெட்சுமி பரிசுகளை வழங்கினார். மல்லாங்கிணர் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் ராஜாராம், உடற்கல்வி ஆசிரியர் வீரபாண்டி, விவசாய அணி செயலாளர் முத்துபாண்டி, நண்பர்கள் மன்றச் செயலாளர் முத்துகுமார் உள்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.