அடிக்கடி ஏற்படும் மின்தடையால் திருச்சுழி பகுதிகளில் பிஎஸ்என்எல் தொலைபேசி மற்றும் இணையதள சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் வாடிக்கையாளர்கள் அவதியடைந்துள்ளனர்.
திருச்சுழி, தமிழ்பாடி, பள்ளிமடம், சென்னிலைகுடி உட்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பிஎஸ்என்எல் வில்போன் மற்றும் இணையதளம் இணைப்பு பெற்றுள்ள
ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ளனர். கடந்த சில மாதங்களாக இப்பகுதிகளில் பிஎஸ்என்எல் தொலைபேசி மற்றும் இணையதள சேவைகள் அடிக்கடி பாதிப்புக்குள்ளாகி வருகின்றன. இதனால் வாடிக்கையாளர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சேவை குறைபாடு காரணமாக பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. மேலும் கடந்த 10 நாள்களாக இப்பகுதியில் பிஎஸ்என்எல் தொலைபேசி மற்றும் இணையதள சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பிஎஸ்என்எல் அதிகாரிகள் கூறியது: அடிக்கடி ஏற்படும் மின்தடையால் பிஎஸ்என்எல் டவர்களில் உள்ள பேட்டரிகள் பழுதடைந்து வருகின்றன. மேலும் மின்தடை நேரங்களில் டவர்களுக்கு மின்விநியோகம் செய்ய ஜெனரேட்டர்களை இயக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் டீசல் செலவும் அதிகரித்து வருகிறது. டவர்களில் உள்ள பேட்டரிகள் பழுதடைந்து வருவதால் மின்தடை நேரங்களில் பெரும்பாலான டவர்கள் இயங்குவதில்லை. இதனால் வில்போன், செல்போன், இணையதள சேவைகளில் பாதிப்பு ஏற்படுகிறது என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!

ரிஷப ராசிக்கு மகிழ்ச்சி: தினப்பலன்கள்!
எடப்பாடி பழனிசாமி பிரசாரத்துக்கு தடை கோரிய வழக்கு தீா்ப்புக்காக ஒத்திவைப்பு!

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை விரும்பும் மக்கள்: சந்திரபாபு நாயுடு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

