காரியாபட்டி அருகே உள்ள பாம்பாட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவியை செல்போனில் படம் பிடித்த ஆசிரியரை கண்டித்து பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
காரியாபட்டி அருகே உள்ளது பாம்பாட்டி அரசு உயர்நிலைபள்ளி. இங்கு படிக்கும் ஒரு மாணவி, தன்னை ஆசிரியர் செல்போனில் படம் பிடித்ததாக அந்த மாணவி பெற்றோரிடம் கூறியதையடுத்து, பாம்பாட்டி, கரிசல்குளம், பாஞ்சார், வையம்பட்டி கிராம பொதுமக்கள் சம்பந்தபட்ட ஆசிரியரை கண்டித்து பள்ளியை முற்றுகையிட்டனர்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்த அந்த ஆசிரியர் பள்ளிக்கு வரவில்லை. காரியாபட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாபு, வருவாய்த்துறை அதிகாரிகள், ஊராட்சி மன்ற தலைவர் ராஜபாண்டியன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் விசாரணை நடத்தினர். இதுகுறித்து கிராம மக்கள் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது: இங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் பணிபுரியும்
ஆசிரியர் ஒருவர் குடிபோதையில் மாணவிகளிடம் ஆபாசமாக பேசுவது, செல்போனில் படம் எடுத்து மிரட்டுவது போன்ற தொந்தரவுகள் செய்து வருவதாகவும், பள்ளி நேரத்தில் நான்கு ஆசிரியர்கள் மது அருந்துவதாகவும் தெரிவித்துள்ளனர். முற்றுகை செய்தவர்களிடம், போலீசார், உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறியதால் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!

ரிஷப ராசிக்கு மகிழ்ச்சி: தினப்பலன்கள்!
எடப்பாடி பழனிசாமி பிரசாரத்துக்கு தடை கோரிய வழக்கு தீா்ப்புக்காக ஒத்திவைப்பு!

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை விரும்பும் மக்கள்: சந்திரபாபு நாயுடு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

