விவசாயிகள் மற்றும் விரிவாக்க அலுவலர்களுக்கு குறைந்த செலவில் மண்புழு உரம் தயாரித்தல் பற்றிய பயிற்சி கோவிலாங்குளம், வேளாண் அறிவியல் நிலையத்தில் நடத்தப்பட்டது.
உழவர் பயிற்சி நிலைய வேளாண் துணை இயக்குனர் செண்பகராஜ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வேளாண் உற்பத்தித் திறனையும், வருமானத்தையும் அதிகப்படுத்தும் முயற்சியாக பாசன மேலாண்மை மற்றும் வேளாண் தொழில்நுட்பங்கள்,
விவசாயிகளுக்கு எளிதாக கிடைத்திடும் வகையில் வேளாண்மை சார்ந்த அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து உலக வங்கி உதவியுடன் நீர் வள, நில வள திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் நோக்கமானது, வேளாண்மையை தீவிரப்படுத்துதல் மற்றும் மாற்றுபயிர் சாகுபடி செய்தல், உப வடிநிலங்களில் உள்ள பாசன அமைப்புகளைக் கொண்டு பயன்பெறும் பாசனபரப்பை அதிகரித்தல் மற்றும் பாசனத்தை உறுதி செய்தல் மற்றும் வேளாண் உற்பத்தி திறனை அதிகரித்து, உழவர்களின் வருவாயை அதிகரித்தல் ஆகியவை ஆகும்.
விருதுநகர் மாவட்டத்தில் 15 உப வடிநீர் பகுதிகளில் நீர் வள, நில வள திட்டம் செயல் படுத்தப்பட்டு வருகின்றன.
இப்பகுதியிலுள்ள 267 விவசாயிகள் மற்றும் 100 விரிவாக்க அலுவலர்களுக்கு குறைந்த செலவில் மண்புழு உரம் தயாரித்தல் பற்றிய பயிற்சி கோவிலாங்குளம், வேளாண் அறிவியல் நிலையத்தில் நடத்தப்பட்டது.
பயிற்சியில் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் பால்பாண்டி மற்றும் உதவி பேராசிரியர்கள், பருத்தி ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் சூர்யசந்திர செல்வன் ஆகியோர் விவசாயிகளின் கேள்விகளுக்கு பதிலளித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!

ரிஷப ராசிக்கு மகிழ்ச்சி: தினப்பலன்கள்!
எடப்பாடி பழனிசாமி பிரசாரத்துக்கு தடை கோரிய வழக்கு தீா்ப்புக்காக ஒத்திவைப்பு!

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை விரும்பும் மக்கள்: சந்திரபாபு நாயுடு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

