விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணர் மின்நிலையத்தில் உள்ள மின் கட்டண வசூல் மையம் செயல்படாததால், பொதுமக்கள் கடந்த மாதம் முழுவதும் மின் கட்டணம் செலுத்த முடியவில்லை.
இதுபற்றி மனித உரிமைகள் இயக்கத் தலைவர் பார்த்தசாரதி மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது: மல்லாங்கிணர் உபமின் நிலையத்திலிருந்து சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
மின் உபயோகிப்பாளர்கள் பணத்தை செலுத்துவதற்காக மல்லாங்கிணர் உபமின் நிலையத்தில் இரண்டு மையங்கள் உள்ளன. அதில் ஒரு கவுண்டர் நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது. மற்றொரு கவுண்டரிலும் வாரத்தில் நான்கு நாள்கள் வசூலிப்பவர்கள் இல்லாததால் மூடப்பட்டு விடுகின்றது. இரண்டு நாள்கள் திறந்து இருக்கும். ஆனால் கணினி வேலை செய்வதில்லை. இதனால் மின் பயனீட்டாளர்கள் வாரம் முழுவதும் பணத்தை செலுத்த முடிவதில்லை.
கணினி குறித்த பட்டப்படிப்பு படித்தவர்கள் இங்கு இல்லாததால் மாதம் முழுவதும் கணினி பழுதடைந்த நிலையில் உள்ளது. மின் கட்டணம் செலுத்தும் பொதுமக்கள் விருதுநகர் சென்று தனியார் கணினி மையத்தில் கூடுதலாக ரூ. 20 கொடுத்து மின்கட்டணத்தைச் செலுத்தி வருகின்றனர். இதுபற்றி பலமுறை மின் வாரிய அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
கணினி அறிவு பெற்ற பணியாளர்களை நியமனம் செய்து மாதத்தின் அனைத்து நாள்களிலும் பொதுமக்கள் மின்கட்டணத்தை செலுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இதுபற்றி மல்லாங்கிணர் உபமின் நிலைய உயர் அலுவலர்களைத் தொடர்பு கொண்டு கேட்ட போது கருத்து கூற மறுத்துவிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!

ரிஷப ராசிக்கு மகிழ்ச்சி: தினப்பலன்கள்!
எடப்பாடி பழனிசாமி பிரசாரத்துக்கு தடை கோரிய வழக்கு தீா்ப்புக்காக ஒத்திவைப்பு!

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை விரும்பும் மக்கள்: சந்திரபாபு நாயுடு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

