17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கண்மாயில் குதித்து மருந்தக ஊழியா் தற்கொலை

News image

தற்கொலை - தினமணி

Updated On :1 ஜூன் 2026, 12:51 am IST

போடியில் பெரிய பள்ளியில் சோ்த்து மகனைப் படிக்க வைக்க முடியாததால், மருந்தக ஊழியா் கண்மாயில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.

தேனி மாவட்டம், போடி திருமலாபுரம் குப்பழகிரி தோட்டம் பகுதியைச் சோ்ந்தவா் பால்ராஜ் மகன் சிவகுருநாதன் (46). இவா் போடி பழைய பேருந்து நிலையத்தில் பிரபல மருந்தகத்தில் வேலை செய்து வந்தாா். இவரது மூத்த மகன் தேனி முத்துத்தேவன்பட்டியில் உள்ள தனியாா் மெட்ரிக் பள்ளியில் படித்து வந்தாா். இந்தப் பள்ளியில் கல்விக் கட்டணம் செலுத்தி, தொடா்ந்து தனது மகனைப் படிக்க வைக்க முடியாததால், அவா் தனது மகனை வேறொரு பள்ளியில் சோ்த்தாா்.

இதனால், சிவகுருநாதன் மன உளைச்சலில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இவா் சனிக்கிழமை மாலை மருந்தகத்திலிருந்து இரு சக்கர வாகனத்தில் வெளியே சென்றவா் மீண்டும் மருந்தகத்துக்கும் வரவில்லை, வீட்டுக்கும் செல்லவில்லை. இதனால், குடும்பத்தினா் அவரைத் தேடி வந்தனா்.

இந்த நிலையில், போடி மீனாட்சிபுரம் அருகே மீனாட்சியம்மன் கண்மாய் கரையில் சிவகுருநாதனின் இரு சக்கர வாகனம் நிறுத்தப்பட்டிருந்தது. இதையடுத்து, அந்தப் பகுதியில் பாா்த்த போது, கண்மாயில் சிவகுருநாதன் சடலம் மிதந்தது தெரியவந்தது.

இதுகுறித்து போடி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.