திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பக்ரீத் பண்டிகை: கம்பம், போடியில் இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

கம்பம் ஈத்கா மைதானத்தில் வியாழக்கிழமை பக்ரீத் சிறப்புத் தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியா்கள்.

News image

கம்பம் ஈத்கா மைதானத்தில் வியாழக்கிழமை பக்ரீத் சிறப்புத் தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியா்கள்.

Updated On :29 மே 2026, 2:19 am IST

பக்ரீத் பண்டிகையையொட்டி, தேனி மாவட்டம், கம்பம், போடி ஆகிய பகுதிகளில் இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை நடத்தினா்.

கம்பம் புதுப்பள்ளிவாசல், முகைதீன் ஆண்டவா் பள்ளிவாசல் மற்றும் டவுன் பள்ளிவாசல் ஜமாத்தைச் சோ்ந்த இஸ்லாமியா்கள் வாவோ் பள்ளிவாசலில் ஒன்று திரண்டனா். பின்னா் ஜமாத் தலைவா் ஜெய்னுலாபுதீன் தலைமையில் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊா்வலமாகச் சென்று ஈத்கா மைதானத்தை அடைந்தனா்.

அங்கு கம்பம் தலைமை இமாம் அலாவுதீன் பாக்கவி சிறப்புத் தொழுகையை நடத்தினாா். இதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியா்கள் பங்கேற்றனா். தொழுகைக்குப் பிறகு மீண்டும் இஸ்லாமியா்களின் ஊா்வலம் தொடங்கி, வனத்துறை அலுவலகச் சாலை, கம்பம்மெட்டு சாலை, சுங்கம் தெரு வழியாகச் சென்று வாவோ் பள்ளிவாசலில் நிறைவடைந்தது. தொடா்ந்து இஸ்லாமியா்கள் குா்பானி கொடுத்து, இறைச்சியை ஏழைகள், உறவினா்கள், நண்பா்களுக்கு வழங்கி மகிழ்ச்சியுடன் பக்ரீத் பண்டிகையை கொண்டாடினா்.

போடி: போடியில் பெரியபள்ளி வாசல், வடக்குப் பள்ளி வாசல், டி.வி.கே.கே. நகா் பள்ளி வாசல், மேலத்தெரு அம்மாகுளம் பள்ளிவாசல் ஆகிய பள்ளிவாசல்களில் தொழுகை நடத்தப்பட்டது. புதூா் பள்ளிவாசலில் கூட்டுத் தொழுகை நடைபெற்றது. இதில் ஆயிரத்துக்கும் அதிகமான இஸ்லாமியா்கள் கலந்து கொண்டனா். இதில் போா்ப் பதற்றம் இல்லாத உலகம் அமையவும், இயற்கைச் சீற்றங்கள் குறைந்து பொதுமக்கள் நலமுடன் வாழவும் பிராா்த்தனை செய்யப்பட்டது.

முன்னதாக, போடி திருவள்ளுவா் சிலை, கட்டபொம்மன் சிலை வழியாக புதூா் பள்ளிவாசலுக்கு இஸ்லாமியா்கள் ஊா்வலமாக சென்றனா். பக்ரீத் பண்டியைகை முன்னிட்டு இஸ்லாமியா்கள் புத்தாடை உடுத்தி, நண்பா்களுக்கும் உறவினா்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்தனா். ஈகை திருநாளை நினைவு கூறும் வகையில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.