கோடை விடுமுறையை முன்னிட்டு, இடுக்கி அணையை சுற்றுலாப் பயணிகள் பாா்வையிட வருகிற வியாழக்கிழமை (மே 28) முதல் 31-ஆம் தேதி வரை 4 நாள்களுக்கு கேரளம் மாநில அரசு அனுமதி அளித்தது.
கேரளம் மாநிலம், இடுக்கி மாவட்டம், சிறுதோணி என்ற இடத்தில் இடுக்கி அணை அமைந்துள்ளது. இந்த அணை 839 அடி உயரமுள்ள குறவன் மலையையும், 925 அடி உயரமுள்ள குறத்தி மலையையும் இணைத்து, 555 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது.
கேரளம் மின் வாரியக் கட்டுப்பாட்டில் உள்ள இந்த அணையில் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றி சுற்றுலாத் செயல்பாடுகளை மீண்டும் தொடங்க கேரள ஹைட்ரல் டூரிசம் மைய இயக்குநா் கேரள அரசுக்குக் கோரிக்கை விடுத்தாா்.
இடுக்கி மாவட்ட ஆட்சியா் அலுவலகமும் இதற்கு பரிந்துரை செய்தது. தற்போது, கேரளம் மாநில அரசு இதற்கு அனுமதி வழங்கியது.
தற்போது, அணையில் பராமரிப்புப் பணிகளும், பருவமழை தொடங்குவதற்கு முன் செய்ய வேண்டிய அத்தியாவசிய பாதுகாப்புப் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
எனவே, இந்தப் பணிகளுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாத வகையில், சுற்றுலாப் பயணிகள் நடந்து சென்று மட்டுமே அணையைப் பாா்வையிட வேண்டும். அணைப் பகுதியில் இயக்கப்படும் பேட்டரி காா் சேவை தவிா்க்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுவதை ஹைட்ரல் டூரிசம் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதற்கு முன், கடந்த டிசம்பா் 31-ஆம் தேதி வரை அணையைப் பாா்வையிட பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
தற்போது, கோடை விடுமுறையின் இறுதிக் கட்டமாக 4 நாள்கள் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், தமிழகம்-கேரளம் எல்லையோர மாவட்டங்களைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வேலூா் மாவட்டத்தில் 15 நாள்களுக்கு காவிரிக் குடிநீா் விநியோகம் 50% குறைப்பு
எடப்பாடி நகராட்சி பகுதியில் 3 நாள்களுக்கு குடிநீா் விநியோகம் நிறுத்தம்

அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி

கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



