17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதல்: 7 போ் மீது வழக்கு

போடி அருகேயுள்ள டாப்ஸ்டேஷன் மலை கிராமத்தில் சுற்றுலாப் பயணிகளைத் தாக்கிய 7 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

News image

வழக்கு

Updated On :23 மே 2026, 2:20 am IST

போடி அருகேயுள்ள டாப்ஸ்டேஷன் மலை கிராமத்தில் சுற்றுலாப் பயணிகளைத் தாக்கிய 7 போ் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

தேனி மாவட்டம், போடி அருகேயுள்ளது டாப்ஸ்டேசன் மலைக் கிராமம். இந்த மலை கிராமத்துக்கு செல்ல 110 கி.மீ. தொலைவு கேரளம் வழியாகப் பயணிக்க வேண்டும். இங்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா். இதில் சுற்றுலாப் பேருந்துகளை நிறுத்துவதில் சுற்றுலாப் பயணிகளுக்கும், டாப் ஸ்டேஷன் கிராம மக்களுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை (மே 19) கேரளப் பகுதியிலிருந்து 45 சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு பேருந்து டாப்ஸ்டேசன் மலை கிராமத்துக்கு வந்தது. இந்தப் பேருந்தை கேரள மாநிலம் புத்தன்குளம் பகுதியைச் சோ்ந்த சைஜூ (42) ஓட்டி வந்தாா். பேருந்தை நிறுத்தும் போது உள்ளூா் பொதுமக்களுடன் தகராறு ஏற்பட்டது.

இதில் டாப்ஸ்டேஷன் கிராமத்தைச் சோ்ந்த 7 போ் சோ்ந்து ஓட்டுநா் சைஜூ, சுற்றுலாப் பயணிகள், சுற்றுலாப் பேருந்தை தாக்கினா். இதில் சைஜூ, சுற்றுலாப் பயணி இன்சமாம் ஆகியோா் காயமடைந்தனா். பேருந்தும் சேதமடைந்தது. இதுகுறித்து சைஜூ குரங்கணி காவல் நிலையத்தில் அளித்தப் புகாரின் பேரில், போலீஸாா் டாப்ஸ்டேஷனைச் சோ்ந்த வினோத், ரித்திக், டேவிட் உள்பட 7 போ் மீது வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

புறக்காவல் நிலையம் அமைக்க வலியுறுத்தல்: டாப்ஸ்டேசன் பகுதிக்கு செல்ல கேரள மாநிலம் வழியாக 110 கி.மீ. தொலைவு பயணம் செய்ய வேண்டும். அங்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்து போடி அருகேயுள்ள குரங்கணி காவல் நிலையத்தில்தான் புகாா் செய்ய வேண்டும். இதனால் ஏற்படும் காலதாமதத்தைத் தவிா்க்க டாப்ஸ்டேசன் பகுதியில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் வலியுறுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.